எழுத்தை அறிவித்தவன் இறைவன்,அறிந்த மொழிக்கு உயிர் தந்தது ஒலி,உயிர் கொண்ட மொழிக்கு வலிமை தந்தது எழுத்து.பூக்கள் ஒன்று சேர்ந்தால் பூமாலையாகும்.எழுத்துகள் ஒன்று சேர்ந்தால் வார்தைகளாகும்.ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் வார்தைகளானாலும், ஒற்றை எழுத்திலேயே பொருள் தந்து, உவகை கொள்ள வைக்கும் செம்மொழி, தமிழ் மொழி.அன்பும், கனிவும் கொண்டழைத்தால் - வா வேண்டாம் என வெறுப்பு கொள்ள - போ மென்மையும், மனமும் கொண்டதால் - பூ வெம்மையும், அனலுமாகக் கொதித்தால் - தீ சுட்டும் பொருளில் - நீ முக்கனிகளில் ஒன்றானால் - மா கொடிய விலங்குகளின் வீடு - கா சாதுவான மிருகம் பசுவினைக் குறிக்க - ஆ போற்றுதலுக்கு - பா தூற்றும் பொழுது தெறிக்கும் - தூ செங்கோல் ஆட்சி தருபவன் - கோ தமிழ் மாதங்களில் ஒன்று - தை பிறரிடம் கேட்பதற்கு - தா பிறரிடம் கேட்காமலே உழைப்பதற்கு - கை கொடுத்தலும், பூச்சி இனமும் - ஈஉதாசீனத்தின் சொல் - சீயாகாவாராயினும் காக்க - நா இசைவு தெரிவிக்க - ம் கண்களுக்கு குளிர்ச்சி தர - மை பொருட்களை தூக்கிச் செல்ல - பை எவ்வெழுத்து என்றாலும், எம்மொழி என்றாலும் அஞ்ஞானம் விரட்டி மெய்ஞானம் புகட்டும் ஒவ்வொருவர் மொழியும், எழுத்தும், அவரவர்க்குப் பெரிதே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.