எழுத்து: அ.வேளாங்கண்ணி

Updated on
1 min read
உள்ளத்து நினைவுகளைமலரெனவே கோர்த்துவிட்டால்எழுத்துக்கள் பூமாலையென‌நிதம்நிதமும் பிறப்பெடுக்கும்...உலகில் பலமொழிகளுண்டுமொழிக்கு தனிஎழுத்துக்களுண்டுஅவரவரின் தாய்மொழிக்குஅவரெழுத்தே மிகஅழகாகும்கல்வியைக் கற்கும்வேளைஎழுதவும் கற்றுக்கொண்டோம்எழுத்துக்கள் புரட்சிசெய்தால்எழுத்தாளன் மகிழ்ச்சிகொள்வான்வகைவகை அழகுசேர்த்துஎழுத்துக்கள் எழுதும்போதும்வகைவகை வண்ணமிழைத்துஎழுத்துக்கள் வடிக்கும்போதும்வானவில் எழுத்துக்கள்வாசம்கூட கொடுத்திடுமேநமைவிட்டு இதழ்தொட்டாலும்பாசம்கூட கொண்டிடுமேபடிக்காத மழலைக்கூட்டம்எழுதுகின்ற எழுத்துக்கள்புரியாது என்றாலும்அழகாய்த்தான் காட்சிதரும்எண்ணத்தை எழுத்துக்கள்சரியாக சேர்த்துவிட்டால்விண்ணைக்கூட எட்டிவிடும்ஜகத்தையெல்லாம் வென்றுவிடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com