/
கொஞ்சிகொஞ்சி பேசிநம்மின் வாக்கைப் பெற்றுக் கொலுவேறி ஆட்சிதனில் அமர்ந்த பின்புகிஞ்சித்தும் நாட்டுநலன் எண்ணி டாமல் கிடைத்தவற்றைச் சுருட்டுகின்ற காட்சி கண்டும்தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்று தலையாட்டி நிற்பதற்கா வாக்கைப் போட்டோம்கொஞ்சமேனும் சொரணையுடன் கயவர் தம்மின் கொடுங்கோலை வீழ்த்துகற்கே இணைவோம் வாரீர் !சாதிகளின் வெறியாட்டம் ! காதல் தம்மைச் சாகடிக்கும் கொலையாட்டம் ! பெண்க ளிங்கேவீதிகளில் நடப்பதற்கும் அஞ்சு மாறு விளைவிக்கும் பாலியலின் காம ஆட்டம்ஆதிக்கம் செலுத்துகின்ற கயமை தன்னை அகற்றாமல் பொம்மைகளாய் நிற்ப தோநாம்ஓதிட்ட சங்கநூலின் சமுதா யத்தை ஒழுக்கத்தை நிலைநாட்ட இணைவோம் வாரீர் !வரமாகக் கிடைத்தஏரி குளங்க ளோடு வயல்களினை வீடுதொழிற் சாலை யாக்கிமரக்காட்டை மலையழித்துச் சுற்றுச் சூழல் மாசாக்கி நோய்களினைப் பரப்பு கின்றார்இரக்கமற்ற இச்செயல்கள் தடுப்ப தற்கே இயங்காமல் பொம்மைகளாய் இருப்ப தோநாம்கரமிணைவோம் சந்ததியர் வாழ்வ தற்குக் காத்திடுவோம் இயற்கையினை ஒன்று சேர்ந்தே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
13 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

