இறைவன், ஆண் பெண்இருவர் உணர்வுகளைஇணைத்துப் படைத்தான்பேசும் மனித பொம்மைகள் !மனிதனோ மண்ணைக் குலைத்துவண்ணங்கள் பல தீட்டிகற்பனை கலந்து படைத்தான்பேசாத மண் பொம்மைகள் !பேசாத மண் பொம்மைகளும்பேசும் நம்மிடம் மௌனமாகஆசையே துன்பத்துக்குக் காரணம்ஓசையில்லாமல் பேசும் புத்த பகவான் பொம்மை !தட்டுங்கள் திறக்கப்படும்கேளுங்கள் கொடுக்கப்படும்அன்புக் கட்டளையிடும்பேசும் ஏசுநாதர் பொம்மை !அஹிம்சை சத்தியாக்கிரகம்புன்னகை மாறாமல் பேசும்சத்திய சோதனை தந்த மகாத்மாகாந்தி பொம்மை !வாடிய பயிரைக் கண்டுவாடும் வள்ளல் பெருமான்எவ்வுயிரும் தம்முயிர்போல்நினைக்கச் சொல்லும்வள்ளலாரின் பொம்மை!தனி ஒருவனுக்கு உணவுஇனி இல்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவேன்முழக்கமிட்ட பாரதி பொம்மை !காவியங்களையே நம்மிடம்கண்முன்னே நிறுத்தும்ராமர் பட்டாபிஷேகப் பொம்மைகண்ணன் கண்ணகி பொம்மைகள் !நிஜத்தைப் பார்க்க முடியாமல்நவராத்திரி திருநாளில்கொலுவில் வீற்றிருக்கும்பேசும் கொலுபொம்மைகளின்நிழலைப் பார்த்துப் பேசிநாமும் பரவசம் கொள்வோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.