தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள்: ​- வேலூர். மூ.மோகன்.

Updated On :10 அக்டோபர் 2016, 11:08 am

ஆண்டவன் படைப்பில் உலகில்
அனைவருமே பொம்மைகள்தான்!

ஆனாலும்...அதற்குள்ளேயும்
எத்தனை எத்தனை வேற்றுமைகள்!

மனைவி சொல்லே மந்திரம்;
மற்றதெல்லாம் வெறும் தந்திரமென
கனவில் வாழும் கணவனும் தன்
'கை பிடித்தவளின்' கைப்பாவைதான்!

பெற்றவர் கனவை நனவாக்கிட
புத்தக மூட்டை சுமந்து படிக்கும்
பிள்ளைகட்கு போதிக்கும் ஆசானும்
பள்ளிக்கூட 'எந்திர'பொம்மைதான்!

தலைவனை திருப்தி படுத்திடவே
தரைவரை குனிந்து வணங்கி,
விலை மதிப்பில்லா தன்மானத்தை
வீசியெறியும் 'ஜால்ரா'பொம்மைகள்!

கோடிகளைச் சுருட்ட அச்சாரமாய்
காசிறைக்கும் வேட்பாளனின் இனிய
வாக்கை நம்பும் வாக்காளனும் ஓர்
 'இலவு காத்த' கிளி பொம்மைதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.