தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !

Updated On :10 அக்டோபர் 2016, 11:30 am
பெரியவர்களுக்குத்தான் அவைகள் பொம்மைகள்குழந்தைகளுக்கோ உயிருள்ள நண்பர்கள் !பொம்மைக்கு சோறுட்டி மகிழ்வார்கள் பொம்மைக்கு ஒப்பனை செய்வார்கள் !குழந்தைகளின் வாழ்வில் அங்கம் பொம்மைகள்கூடவே வைத்துக் கொள்வார்கள் எங்கு சென்றாலும் !குழந்தைகள் பேசி மகிழும் பொம்மைகளுடன் குதூகலமாகக் கொஞ்சி மகிழும் நாளும் !தூங்கும்போதும் பொம்மைகளைப் பிரிவதில்லை தன் அருகிலேயே படுக்க வைக்கின்றனர் !ஏழைவீடு  பணக்காரவீடு  பொம்மைகளின் தரம்  ஏற்றத்தாழ்வு இருந்தாலும் எல்லா வீட்டிலும் உள்ளன !குழந்தைகள் பொம்மைகளின் பெற்றோர் ஆகின்றன குழந்தைகள் பொம்மைகளுக்கு அறிவுரை வழங்குகின்றன !குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு குழந்தையாக இருப்பதும் பொம்மைகளே !மரப்பாச்சி பொம்மைகள் வழக்கொழிந்து விட்டன மனதில் இன்றும் அகலாமல் இருக்கின்றன !ஆடை இல்லாத மரப்பாச்சி பொம்மைகளுக்கு ஆடை கட்டி விட்டு ஆனந்தம் அடைவோம் !குழந்தைக்கு காய்ச்சல் வந்தால்  உடன் அம்மா பொம்மையை உரசி எடுத்து பத்து இடுவாள் ! கேட்காமலே கணக்கில்லா முத்தங்களை குழந்தைகள் பொம்மைகளுக்கு தந்து மகிழ்கின்றன !யாரவது பொம்மையை எடுத்தால் அவர் யாராக இருந்தாலும் கோபம் கொள்கின்றன !பொம்மை உடைந்து விட்டால் கவலையில் குழந்தைகளின் மனசும் உடைந்துவிடும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.