தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் எனும் மாயப் பேய்:  H ஹாஜா மொஹினுதீன்

Updated On :17 அக்டோபர் 2016, 10:34 am

அடங்க மறுக்கும் !
ஆட்டம் தொடங்கும் !

நிம்மதி தேடி - 
நீண்ட தூற பயணமாயினும் ;  
மனம் மட்டும் அடங்கவில்லை !
மாற்றம் ஒன்றும் நிகழவில்லை  !

மாற்றத்தை தேடும், மகிழ்ச்சியை தொலைக்கும் !
சந்தோசமாய் இருந்தாலும், சந்தேகத்தை கிளப்பும் !
அமைதி இல்லாது அலைக்கழிக்கும் ;
ஆற்றாமையில் ஆட்களை வெறுக்கும் !

தவறை கூட சரியாய் காட்டும் ! 
சாத்தானை கூட சகோதரனாய் காட்டும் !
நல்லோர் பக்கம் நெருங்க மறுக்கும் !
நரிவேஷம் போடுவோரிடம் நலம் விசாரிக்கும் !

தவறு என்று தள்ளிவந்து ; 
தனிமையில் இருந்தாலும்  ;
தாறுமாறாய் யோசிக்கும் ;  
தடம்புரள வைக்கும் !

அக்கிரமம் கண்டு ஆவேசப்படும் ! 
அடக்க நினைத்து  அடங்கி போகும் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.