இது ஏற்றம்
வைத்து நீர்
இறைத்த போது
பாடிய கவிதை ...
ஏற்ற பாட்டுக்கள்
எல்லாம் இப்போது
ஏட்டுக்களில்
மட்டுமே எட்டி
பார்த்துக்கொண்டிருக்கின்றன ..
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
சம்பாவே
இப்போது
அம்போவென்று
காத்திருக்கிறது ..
குறுவையோ
கருகிப்போயிருக்கிறது ...
இதில் ஏது
புல்லுக்கு நீர்......
பம்ப்செட் வைத்து
நீர் பாய்ச்சலாமென்றால்
பாதாளத்துக்கு
போய்விட்டது
பாழும் நீர் ..
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
சேற்றிலே
வைத்துக்கொண்டிருந்த
கால்கள் எல்லாம்
இப்போது
சிமெண்ட்
கலவையில் மட்டுமே ...
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
விவசாயத்தின்
சாயம் எப்போதோ
கரைந்து விட்டது
இல்லை.. இல்லை..
காற்றிலேயே
கலந்து விட்டது ..
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
சொட்டு தண்ணீர்
தர மாட்டேன் என
அண்டை மாநிலம்
'நாடகம்' போட
சொட்டு நீர் பாசனமே
நமக்கு இனி கதி...
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
நெல்லுக்கு
வரும் நீர்
இப்போது
நெல்லுக்கு மட்டுமே..
இதில் ஏது
புல்லுக்கு நீர் ...
புல் எல்லாம்
இப்போது நெல்லை
நம்புவதில்லை ...
அவை காற்றிலேயே
நீர் எடுக்கும்
கலையை எப்போதோ
கற்றுக்கொண்டுவிட்டன ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

