/
வந்தாரை வாழவைக்கும் தமிழகமேவாடி நிற்குது காவிரியின் நிலையாலே!தந்திர நரிகளால் 'மேல் திக்கில்'தாக்குதல் வன்முறை தமிழன்மேலே!நெஞ்சு பதைக்குது தினம் தினம்நெருப்பில் கருகிடும் 'மனிதாபிமானம்'!வஞ்சக 'சகுனி'களால் நம்மினத்தார்வாழ்வே கேள்வியாய்..நதிநீரால்!உயிர்நீரை எதிர்நோக்கிக் காத்திருக்கும்உழவனுக்கும் கண்களில் செந்நீர்!தாய்நாடு காக்க இரத்தம் சிந்தலாம்;தண்ணீருக்கு இரத்தம் சிந்தலாமோ?நதிகளின் நீர்வளம் அனைத்துமே நம்நாட்டுக்கே உரிய செல்வமன்றோ?பிரிவினை கோரும் பித்தர்கள்போல்உரிமை கோருதல் முறையாகுமோ?திருடனுக்கு அறிவுரை சொன்னால் அவன்திருந்திட நிறைய வாய்ப்பு உண்டு!முரடனை திருத்திட முனைந்தால் அதுமுற்றிலும் வீணாய்ப் போகுமன்றோ?நிச்சயம் இதற்கோர் தீர்வு உண்டு-நீதி தேவதையின் பார்வை பட்டு!சத்தியமே இறுதியில் வெல்லுமென்றுசரித்திரம் சொல்லும் பாடமது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

