ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நீதியைத் தேடி !  கவிஞர் இரா .இரவி!

Updated On :23 செப்டம்பர் 2016, 2:58 am

நீதியைத் தேடி  அலைய வேண்டிய காலம் வந்தது 
நீதிக்காக உயிர் துறந்த மன்னன் வாழ்ந்த பூமி இது !

தவறு செய்திட்ட மன்னனுடன் ராணியும் சேர்ந்து 
தன் உயிரை மாய்த்திட்ட மாண்புள்ள பூமி இது !

குடிமக்களுக்கு மட்டுமல்ல பசு வந்து மணியடித்ததும் 
கேட்டு அறிந்து நீதி வழங்கிய  மண் நமது மண் !

தவறும் செய்தது தன் மகன் என்றும் தெரிந்தும்
தண்டனை வழங்கிய மன்னன் வாழ்ந்த பூமி இது !

புறாக்களுக்காக தன் சதையை அறுத்து வழங்கிய 
பண்டைய மன்னன் வாழ்ந்த வசந்த பூமி இது !

தாமதமான நீதியும் அநீதி என்று அறிவித்த 
தேசம் நம் அழகிய தேசம் என்பதை உணர்வோம் !

கோடிகள் திருடிய கேடிகள் எல்லாம் நம் நாட்டில் 
கைதாகி பிணையில் வெளி வந்து விடுகின்றனர் !

பசியின் கொடுமையால் ரொட்டி திருடிய ஏழையோ 
பாழும் சிறையில் பரிதவித்து வருகிறான் !

பணக்காரனுக்கு ஒரு நீதியும்  நம் நாட்டில் 
பாமரனுக்கு ஒரு நீதியும் வழங்குதல் முறையோ ?

நடிகர் மது அருந்தி மகிழுந்து ஒட்டி கொலை செய்தார் 
நிரபராதி என்று விடுதலையாகி விட்டார் !

நீதி தேவதையின் கண்ணில் கறுப்புத் துணி 
கட்டியதன் காரணம் என்ன தெரியுமா  ?

பணக்காரன் ஏழை என்ற பாரபட்சமின்றி 
பார்க்காமலே நீதி வழங்க வேண்டும் என்பதற்குத்தான் !

குற்றவாளியை குற்றமற்றவர்  என்றும்  
குற்றமற்றவரை குற்றவாளி என்றும் கூறுவதை !

நீதி தேவதை கண்டு கொள்ளாமல் இருக்க 
நீதி தேவதைக்கு கட்டவில்லை கருப்புத்துணி !

ஒரு அறிஞர் பகலில்  கையில் விளக்குடன்
ஒரு மனிதனாவது தென்படுவானா எனது தேடினார் !

இன்று நம் காலத்தில் நீதி கிடைக்குமா 
என்று தேடி அலைய வேண்டிய அவல நிலை !

இன்றும் கண்ணியமான நீதிமான்கள் பலர்  உள்ளனர் 
இழிவான கண்ணியமற்றவர்களும் சிலர் உள்ளனர் !

கருப்பு ஆடுகளை உடன்  களை எடுப்போம் 
கண்ணியமானவர்களுக்குக்  கரம் கொடுப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.