நீ கண்சிமிட்டினால்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
கண்மூடிப்  படுத்திருந்தால்  சிலந்தி  கூடக்            கால்களினை  இணைத்துவலை  பின்னப்  பார்க்கும்மண்மீதில்   ஊர்ந்துசெல்லும்   எறும்பு  கூட            மண்டைமீதில்  ஏறிநின்றே  எள்ளல்  செய்யும்வண்ணமயக்  கனவுகளில்  மூழ்கி  ருந்தால்            வந்துநாயும்  கால்தூக்கி  நீர்க  ழிக்கும்கண்சிமிட்டி   நீயெழுந்தால்   மலையும்  கூடக்            கடுகாகிப்  பொடியாகும்  உன்றன்    கையால் !நடக்கின்ற  கயமைகளைப்  பார்த்துக்  கொண்டே            நடமாடிக்  கொண்டிருந்தால்   குருடன்  என்பர்முடமாகிப்  போனவன்போல்  அமைதி  காத்தால்            முகமெதிரே  ஏளனமாய்  ஊமை  யென்பர்படமெடுத்தே  ஆடுகின்ற  பாம்பைக்  கண்டால்            பக்கத்தில்  நெருங்குதற்கும்  அஞ்சல்  போன்றேஅடலேறாய்க்   கண்சிமிட்டி   நீயெ  ழுந்தால்            அடுத்நொடிக்    கயவர்கள்   ஓடிப்  போவர் !பெரும்ஆற்றல்   உனக்குள்ளே   அடங்கி  யுள்ள            பெருஞ்செய்தி   அறியாமல்   இருக்கின்  றாய்நீஇருதோளின்   வலிமையினைத்  தெரிந்தி  டாமல்            இருபுறமும்  தொங்கவிட்டுத்   திரிகின்  றாய்நீகருவிழியைச்   சிமிட்டிநீயும்   எழுந்து    விட்டால்            கடல்பொங்கி  எழுவதுபோல்   எழும்உன்  ஆற்றல்அருஞ்செயல்கள்   செய்திடுவாய் !  குமுகம்   தன்னில்            அடையாளம்  பதித்திடுவாய்  நிலைத்து  நிற்பாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com