எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நீ கண் சிமிட்டினால்: சர்வோ சீனிவாசன் 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 9:58 am

கவிதைமணி

அங்கங்கள் ஐந்தாம் 
ஆண்டவன் படைப்பினிலே 
திறன்கள் ஐந்தும்
தேவையன்றோ உயிரினங்களுக்கே !
கண்ணுக்கு மட்டும் 
கதவினை ஏன் படைத்தான்?
இதயத்தின் துடிப்பினைப்போல் 
ஏன் மூடி திறக்கின்றாய் ?
ஆயிரம் வரிகள் கூறா காவியத்தை 
ஒரு கண் சிமிட்டல் கூறுமாமே!
பிறந்த சிசுவின் அழகே 
அந்த கண்சிட்டலன்றோ! 
தாயும் சேயும் பேசுவதே 
கண்சிமிட்டலில் தானே!
காதலும் காமமும் 
பல்லாங்குழி ஆடுமாமே 
ஒரு கண்சிமிட்டையில் !
ஆயிரமாயிரம் பாஷைகள் 
ஆயினும் கண் இமை சிமிட்டும் 
பாஷை காவியம் படைக்குமன்றோ!
கண்ணும் இமையும் காட்டிய 
வித்தையன்றோ உலகத்தையே 
பன்முறை பார்க்க தூண்டியது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.