செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் அரங்க.கோவிந்தராஜன் 

Updated On :2 ஜூன் 2018, 1:31 pm
     பணத்துக்காக  அலையும் போது எனக்கு        போர்க்களமாய் காட்சி தருகிறது வாழ்க்கை      குணத்துக்காக கைப்பிடித்த குணவதிக்கு        மனத்துக்குகந்ததை செய்ய முடியவில்லை                    பாசமாக அம்மா கேட்ட கம்பளிப்போர்வை           அப்பா கேட்ட புதுக்கண்ணாடி,புதுசெருப்பு      பாசமகள் கேட்ட புதுசீர்ருடை ,சூ வாங்க           ஆகட்டும்  பார்க்கலாம் ஆறுதலாய் பதில்!      அம்மாவை முதியோர் அகத்தில் விட்டுவந்தேன்           அன்பு மகளை காப்பகத்தில் சேர்த்திட்டேன்      அன்பு மனைவியை  நகரப்பேருந்தில் ஏற்றிவிட்டேன்            அடுத்த பேருந்தில் நான் பயணமானேன்            இப்படியே நாட்கள் ஆறினை ஓட்டினேன்         ஏழாவது நாள்  ஏராளமாய் எனக்கு வேலை      எப்போது ஓய்வுவரும் எதிர்பார்த்து காத்திருந்தேன்        இல்லத்தரசியாய் மட்டும் இருக்க மனைவிக்கு ஆசை        உண்டு உறங்கி களித்து வாழ்ந்த நாட்கள் எத்தனை?         அத்தனையும் களவுபோன நமது பொழுதுகள்      உண்டு , உறங்கி  கழிக்க மட்டும் வாழ்வென்றால்            விலங்குகளாய், பறவைகளய் பிறந்திருக்கலாமே!          மனிதனாக பிறப்பது பெரிதல்ல மனிதானய் வாழ்ந்து            மனிதனாய் மறைதலே மகிச்சியளிக்கும்!      மகத்துவத்தை உணர்ந்து மகிழ்ச்சியாய் வாழ்வோம்            மகிழ்ச்சியை நமக்கு நாமே அன்பளிப்போம்!       வாழ்க்கை யெனும் போர்க்களத்தை மாற்றி             வாழ்வோம் அமைதிப் பூங்காவாய்!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.