/
சிந்தனைகள் தொடர்ந்திருக்கும் செயலை எண்ணி சிதைந்திடாது முடிப்பதற்கு வழிகள் தேடி’எந்தவொரு பாதையிலே சென்றால் நன்று என்றுதினம் ஏங்குவதே மனதின் தொண்டுபந்தமென்றும் பாசமென்றும் உந்தும் ஆசை பற்றுவைத்த காரணத்தால் நிறைந்தே சேரவந்துநின்ற பிறப்பினிலே வாட்டம் ஓட்டம் “வாழ்க்கையெல்லாம் போர்க்களமே”யார்க்கும் இங்கே !நொந்துநூலாய் அந்துவிடும் அச்சம் கொள்ள நிறைவாக்க வேண்டுமென்று இச்சை கொள்ளபந்துருளும் நிலைபோலே பாதை மாறி படுந்துன்பம் படுவோர்க்கே தெரியும் என்றும்எந்தசெயல் செய்தாலும் இடையூ ராகி இன்னலதே முந்திவந்து எதையும் மாற்றும்வந்திருந்த வசந்தமெல்லாம் புயலாய் மாறும் “வாழ்க்கையெனும் போர்க்களமே” வரவென் றாகும்வருவதெல்லாம் இப்படித்தான் என்றே எண்ணி வாய்த்ததுதான் வாழ்க்கையென்ற நிறைவே கொண்டுதருவதெல்லாம் தன்மகிழ்வாய் கருதும் போது தனித்துவந்து சஞ்சலமே தோன்றா தென்றும்தெருவினிலே வாழ்ந்திருப்போர் துன்பம் கண்டு தேர்ந்திருக்கு நமதுவாழ்க்கை நன்றே என்றுவருந்திடாது இருநிலையும் சமமாய் கொண்டால் “வாழ்க்கையெல்லாம் போர்க்களமா” இல்லை ! இல்லை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

