செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: பொன். குமார் 

Updated On :2 ஜூன் 2018, 12:38 pm

பிறப்பு முதல்
இறப்பு வரை
போராடியே வாழ வேண்டும்.
என்றும் எப்போதும் எங்கும்
எதிர்க் கொண்டே இருக்கும்
பிரச்சனை. 

இடையிடையே இன்பம்
எட்டிப் பார்க்கும். 
துன்பம் என்பது
தொடர்கதையாகவே தொடரும்.

ஒன்றிலிருந்து விடுபடுவதற்குள்
புதிதொன்று பூத்து விடும். 
வாழ்க்கையெனும் பாதையில்
விபத்துகள் நேரவே செய்கிறது. 

எல்லாம் கடந்தே
எல்லையை எட்ட வேண்டும்.
வாழ்க்கையெனும் போர்க்களத்தில்
வெற்றி தோல்வி வருவதற்குள்
வாழ்ந்துதான் ஆக வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.