தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஒரு முறையேனும்: -ஆர். வித்யா

Updated On :25 ஜூன் 2018, 10:49 am
பசியறிந்து ருசி உணர்ந்து உணவைஒருமுறையேனும் உட்கொண்டதுண்டா?!மனம் துள்ளும் இசை கேட்டு உட்கார்ந்தபடியாவது நடனமாடஒருமுறையேனும் உடம்பு இசைந்ததுண்டா?!சாதா மழைக்கே வீட்டுக்குள் வந்துவிட்ட வெள்ளத்தைஇயற்கையின் வரமென்று ஒருமுறையேனும் மனம் ஏற்றதுண்டா?!கவிதை வாசிப்பில் கதையும் கதை வாசிப்பில் கவிதையும் கிடைத்திட்டபரவசவேளையை ஒருமுறையேனும் அடைந்ததுண்டா?!அக்னி உச்சி வெய்யில் வேளையில் மரநிழலில் ஒதுங்கி மரக்குளுமையால்ஒருமுறையேனும் உடலை குளிர்வித்ததுண்டா?!குடை இன்றி குளிரக்குளிர மழையில்ஒருமுறையேனும் நனைந்து கொண்டே நடந்ததுண்டா?!மின்வெட்டு வேளையை ஒருமுறையேனும் சபிக்காமல் ஏற்றுக்கொண்டதுண்டா?!தூரநின்று கடல் அலையையும் நடுவில் நின்று மித ஓட்ட நதிநீர் அலையையும் ஒருமுறையேனும் படித்ததுண்டா?!அடிமை உணர்ந்து விடுதலை அடைந்துஒருமுறையேனும் சுதந்திரக்காற்றை சுவாசித்ததுண்டா?!குழந்தையை வலிக்க வலிக்க அடித்துவிட்டுதனிமையில் கண்ணீர்வராமல் ஒருமுறையேனும் அழுததுண்டா?!பனியில் நனைந்தபடி கிழக்கில் எழுந்துவரும்கதிரவனின் முதல் கதிரை ஒருமுறையேனும் கண்டதுண்டா?அப்படியாயின் நீவீர் மனிதராவீர்!! வாழ்க மானுடம் !! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.