யார் இட்ட சாபம்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated on
1 min read
நெற்களஞ்சியமாம் தஞ்சையைத் தரிசாக்கும்அற்பச் செயல்களையே தினமும் செய்திடலாமோபொற்பதங்கள் வைத்துப் பையப் பைய நடந்தகற்பகத் தருவாம் காவிரியை வஞ்சித்திடலாமோகவின்மிகு கலைகள் வளர்த்தே அனுதினமும்புவிமீது கொண்ட ஆசையினாலே தமிழகத்திலேகுவிந்த குளிர்தரு நிழலாய் மரஞ் செடி கொடிகளெனகவிபாடிய அன்பில் விவசாயம் செழித்திட உதவியகாவிரித் தாயை வைத்துப் போராடும் இழிநிலைஆவியாய்ச் சுற்ற சாபம் இட்டதும் யாரோபாவியாய் புவியில் விவசாயிகள் துன்பப்படவாகூவிக் கேட்டும் நீரில்லா நிலை யார் இட்ட சாபம்அரசியல் மக்கள் நலனுக்கே என்ற நிலை மாற்றிஉரசும் சொந்தங்கள் வாழவே எனப் புரிந்துகொண்டுசிரசு வரை ஊழலில் திளைக்கும் அரசியலார் வாழமுரசு கொட்டும் முட்டாள் தனம்  யார் இட்ட சாபமோஅதிகார போதை தலைக் கேற சதிகார அம்புகளைகதியற்ற ஏழைகளின்மீது பாய்ச்சி பணம் பிடுங்கும்சதிகாரப் பணியாளரின் ஈவு இரக்கமில்லாத் தன்மைகுதிபோட லஞ்சம் தலைவிரித்தாட சாபம் இட்டது யாரோசாதிமத வேறுபாடுகள் தீர்க்க முடியா நோயாகியேஆதியிலிருந்தே அடிதடியும் ஆதிக்கமுமாய் இன்றும்வாதியற்ற வழக்காகித் தொடரும் அன்பற்ற நிலைஓதியும் உணராதபடி சாபம் இட்டதும் யாரோ யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com