என்றும் என் இதயத்தில்: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated on
1 min read
என்றும்யென் இதயத்தில் நீங்காத வலிகளாய்     இருக்கின்ற தெல்லாமும் நம்தலைவன் ராஜீவைநன்றியிலா பிரபாகரன் கொன்றிட்ட செயலே,     நாயினும் கீழானான் என்பதே உண்மை!வென்றானா போராட்ட வேள்விதனில் அவனும்,     விவேகமே இல்லார்க்கு வெற்றிகிட் டாதாம்!ஒன்றினை நாமெல்லாம் உணரத்தான் வேண்டும்     உன்னதநல் நன்றிதனை மறவாமை வேண்டும்!இதயமதில் கொடிதான வலிதன்னைக் கண்டேன்      எத்தனையோ முறையாக இதுவரையில் நானும்!மதவாதந் தனையிந்த நாட்டுமக்கள் போற்றி      மதிகெட்ட பிஜேபி தனைத்தேர்ந்த போதில்!இதமான வகைதன்னில் மன்மோகன் ஆண்டும்      இல்லாதக் குற்றமதை சுமத்திட்டப் போதும்!பதறிடுதே நெஞ்சமதும் இன்னாட்டு மக்கள்      பசலிகளே என்றாகக் காண்கின்ற போதில்!கும்பகோணந் தனிலன்று பச்சிளங் குழந்தைகளை      கொன்றிட்ட தீவிபத்தை நெஞ்சம்மற வாதே!நம்மீது இந்திதனை திணித்திட்டப் போதுதென்      நாட்டுமக்கள் எதிர்த்துப் போராட்டம் செய்ய,வம்பர்கள் துப்பாக்கிச் சூடுதனை நடத்திட      வாழ்வுதனை பலரிழந்த வடுவும்மறை யாதே!நம்மிதயம் இன்னதனை மறக்கவுந் தகுமோ,      நாம்போகும் வரைதன்னில் இதயம்மற வாதே!பஞ்ஜாபில் நடந்திட்டப் படுகொலையை இன்றுவரைநெஞ்சமதும் மறவாமல் நினைந்திடுதே என்னாளும்!விஞ்சிடுமோ எதுவொன்றும்?  விளைத்திட்ட டயர்தன்னை,எஞ்ஞான்றும் மறவாமல் இவ்வுலகும் தூற்றிடுதே!நாடிதனை ஆண்டுவர நயவஞ்சகர் தமைதேர்ந்துகேடினைநாம் காண்பதுவும் கேவலமே!--மோடியவன்,உதவாதான் என்றுணர்ந்தும் ஊர்மக்கள் தேர்வதேன்,இதயவலி தீர்வதுவும் என்று?இதயத்தில் பதிந்தவலி இன்றுவரை மறையாமல்நிதமுமது தோன்றிடுதே நினைவலையாய்!--பதறவைக்கும்,எண்ணற்ற சம்பவங்கள் இதனைப்போல் கண்டோம்நாம்;கண்ணைவிட் டகலாதக் காட்சி!         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com