வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: ரெத்தின.ஆத்மநாதன்

Updated On :27 மே 2018, 8:45 am
என்றும்   என்னிதயத்தில்   இருப்பது   யாரென்றுவெளியில் சொல்லாமல் வெளியார்க்குக் காட்டாமல்கிணற்றிட்ட   கல்லாக    கீழ்ப்படிந்த   கூழாகரகசியம் காப்பதனால் ரம்மியந்தான் மனசெல்லாம்!உற்றார்   உறவினரும்   ஊராரும்   ஒருசேரநிந்தித்த வேளையிலும் நிலைதடுமாறும் போழ்தினிலும்உள்மனத்தில் ஆசாரமாய் உட்கார்ந்து உறுதிதரஎங்கேதான் கற்றாயோ?எப்படித்தான் உணர்ந்தாயோ?உள்ளத்தின் ஓரத்தில் உதறல் எடுக்கையிலும்பள்ளத்தில் வீழ்ந்து பரிதவிக்கும் போதினிலும்வெள்ளத்தின் கரங்கள் விடாது சூழ்கையிலும்கள்ளமேயின்றி நீயும் கனன்றிடுவாய் மனத்துள்ளே!என்னுள்ளே ஓடுகின்ற இரத்தமும் நிணநீரும்கண்ணுள்ளே ஆடுகின்ற காட்சிகள் அத்தனையும்நீ போட்ட பிச்சையம்மா!நெஞ்செல்லாம் என்றும்இருப்பவள் நீயம்மா! இதுதான் உண்மையம்மா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.