செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: ரா.பார்த்தசாரதி

Updated On :27 மே 2018, 8:56 am
      என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே       உன்னருகில் நான் இருந்தால்  உன் இதயம் சிறகடுக்குதே       காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே       என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !      காதலுக்கு தேவை கனிவான பார்வையே       இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே       இரு இதயங்கள் சேர்ந்து இணையம்  சுகமே       இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !     காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா      உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா      உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும்  போதினிலே      இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !      நான் சந்திரன் என்றால்  நீ மலர்ந்திடும்  அல்லிப் பூ        நான்  இமை என்றால் நீ  என் கண்       நான் உடல் என்றால் நீ என் உயிர்.       நான்  பேச்சு என்றால் நீ என் மூச்சு .      காதல் எனும் மொழி பேச  வருவேன்  உன் வாசலுக்கே       விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே       உன்னை நான் பார்க்கும்போது  நான் ஊமையாகின்றேன்      உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.