போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 2

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும்

News image
Updated On :9 ஜூலை 2018, 12:15 am


பாடல் - 2

கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்,
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே.

தொண்டர்களே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணபுரத்திலே, பெண் நண்டுகள் அங்குமிங்கும் சென்றுவருகிற வயல்களால் சூழப்பட்ட அகழிகளின் அருகே, வெள்ளிக்கிரகத்தையே தொடுமளவுக்கு உயர்ந்த மதிள் சுவர், அத்தகைய திருக்கண்ணபுரத்தை மனத்தில் நினையுங்கள், ஒவ்வொரு நாளும் அதைத் தொழுது எழுங்கள், தேன் சொட்டும் மலர்களை இட்டு எம்பெருமானிடம் இறைஞ்சுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.