
கோவில்பட்டி: கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி - சாத்தூர் பிரதான சாலையில் வேலாயுதபுரத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனம் அருகே உள்ள வளாகத்தில் தனியார் தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது.
கோவில்பட்டி ராஜீவ் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருண் நடத்தி வரும் இயந்திரம் மூலம் தயாரிக்கும் தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம்.
இதைக் கண்ட தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இயந்திரத்தில் பெரும்பாலான பகுதி தீயில் கருகி நாசமாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.