பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீறு
ஆடினார் ஆடல் மேவி அதிகை வீரட்டானாரே

விளக்கம்

பாயிருள் = பரவிய இருள்: மதுரை நகருக்கு நான்மாடக் கூடல் மற்றும் ஆலவாய் என்ற பெயர்களும் உள்ளன. இந்த பெயர்கள் மதுரை நகருக்கு வந்த காரணம், திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகின்றது. கடுமையான வயிற்றுவலியால் வருந்திய வருணன், சிவபெருமான் தனது நோயினை போக்கவில்லை என்று எண்ணி, சிவபெருமான் உறையும் மதுரை மாநகரை, நாற்புறத்திலும் கடல்கள் சூழ்ந்து அழித்து விட, கடல்களுக்கு ஆணையிட்டான். தங்களது தலைவனாகிய வருணனின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, மதுரை நகரை நான்கு புறங்களிலும் கடல் சூழ்ந்து கொள்ள. மதுரை மாநகர் கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. அப்போது மன்னனாக இருந்த அபிடேகப் பாண்டியன், சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிட்டான். முறையிட்ட மன்னவனை அஞ்சேல் என்று சொல்லி தேற்றிய சிவபெருமான், தனது சடையிலிருந்து நான்கு மேகங்களை அனுப்பி, கடல் நீரை உறிஞ்சி வற்றச் செய்யுமாறு ஆணையிட்டார். நான்கு மேகங்களும் அவ்வாறே செய்ய, மதுரை நகர், கடல்கள் பொங்கி வந்ததால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. கடல்கள் வற்றியதால் மேலும் கோபம் அடைந்த வருணன், நீர் நிரம்பிய ஏழு மேகங்களை அனுப்பி, மழை பொழிந்து மதுரை நகரை அழிக்கத் திட்டம் கொண்டான். ஏழு மேகங்களும் மதுரை நகரைச் சூழ்ந்துகொள்ள, மதுரை நகரமே இருளால் மூழ்கியது. கலக்கம் அடைந்த பாண்டிய மன்னன், சொக்கநாதப் பெருமானிடம் மறுபடியும் முறையிட, சிவபெருமான், முன்னர் கடலை வற்றச் செய்த நான்கு மேகங்களை, வருணன் ஆணையினால் பெய்யும் மழையினைத் தாங்குமாறு பணித்தார். அந்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக மாறி, ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாதவாறு பிணைந்து ஒரு துளி மழையும் மதுரை நகர் மீது விழாதவாறு தடுத்தன. வருணனின் ஆணையால் பெய்த மழைநீர் அனைத்தும் சிதறி, கடலில் சென்று கலந்தன. சிவபெருமானின் வல்லமையினை உணராமல் தான் செய்த செயல்களுக்கு நாணமுற்று வருணன் சிவபெருமானை வணங்கி, தனது நோயும் தீரப்பெற்றான். இதுதான் நான்மாடக் கூடல் என்றும் கூடல் என்றும் மதுரை நகருக்கு பெயர் வந்த வரலாறு.

வங்கிய சேகர பாண்டிய மன்னன், பண்டைய நாட்களில் மதுரை மாநகர் பரவி இருந்த எல்லைகளை, தான் அறியாத காரணத்தால், அவற்றைத் தனக்கு காட்டி அருளுமாறு சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலுக்கு இணங்கி, சித்தராக வந்து காட்சி அளித்த சிவபெருமான், தனது கையில் கங்கணமாக திகழும் பாம்பினை, மதுரை நகரின் எல்லைகளை வரையறுத்துக் காட்டுமாறு பணித்தார். அந்த பாம்பும், இறைவனை வணங்கியபடி கிழக்கு திசை நோக்கிச் சென்று, தனது உடலும் வாலும் நீள, அவ்வாறு நீண்ட வாலினைத் தனது வாயினால் கவ்வியவாறு, மதுரை நகரின் எல்லைகளை குறிப்பிட்டு காட்டியது. ஆலம் என்றால் வாய் என்று பொருள். இவ்வாறு வாயினில் வாலினைப் பொருத்தி எல்லைகள் காட்டப்பட்டதால் ஆலவாய் என்று அழைக்கபட்ட நகரம் மதுரை ஆகும்.

இறைவனின் திருவிளையாடலால் நிகழ்ந்த இந்த இரண்டு நிகழ்சிகளையும் உணர்த்தும் வகையில், பல பாடல்களில் ஞானசம்பந்தர் இந்த நகரத்தை கூடல் ஆலவாய் என்று அழைக்கின்றார். அத்தகைய பாடல் ஒன்றினை (3.52.1) நாம் இங்கே காணலாம்.. இந்தப் பாடலின் நான்கு அடிகளிலும் ஆலவாயிலாய் என்று இறைவனை அழைப்பதுபோல் தோன்றினாலும், முதல் மூன்று அடிகளை வீடு / பாடு / காடு அலால் அவா இலாய் எனப் பிரித்து பொருள் கொள்ளவேண்டும். வீடுபேறு பெறுவதைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லாத மெய்யடியார்கள் சிவபிரானின் திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு அவர்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்பதைத் தவிர வேறு ஆசைகள் இல்லாத பண்பினை உடைய சிவபெருமான், காட்டினைத் தவிர வேறு எதையும் இருப்பிடமாகக் கொள்வதில் விருப்பம் இல்லாதவன். கபாலி என்று அழைக்கப்படும் அந்த பெருமான், காட்டினை விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டவன், கூடல் ஆலவாயிலாய் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரில் பல திருவிளையாடல்கள் புரிந்தது எவ்வாறு என்பது தனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நீண்ட மதில்கள் கொண்ட நகரம் மதுரை என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.

வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்

பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே

காடலால வாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்

கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே

பொழிப்புரை

கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை மாநகரில் உறையும் சிவபெருமான், நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு, நல்ல கொன்றை மாலையை அணிந்தவராய் காணப்படுகின்றார். அவர் அறியாமையாகிய இருளில் மூழ்கி இருந்த எனது உள்ளத்தில் புகுந்து, ஞான விளக்கினை ஏற்றிவைத்தார். சுடுகாட்டில் இருக்கும் ஒளிவீசும் சாம்பலை விரும்பித் தனது உடலில் பூசிக்கொள்ளும் அவர், அதிகை மாநகரத்தில் தங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை