வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத்தாலே
சுரிபுரி விரிகுழல் ஆடு துடியிடைப் பரவை அல்குல்
அரிவையோர் பாகர் போலும் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

வரிமுரி = இசைப் பாடல் வரிகள்: சிலப்பதிகாரத்தில், கானல்வரி, வேட்டுவவரி என்று பல வகையான வரிப் பாடல்கள் காணப்படுகின்றன. அத்தகைய வரிப் பாடல்களின் பாணியிலிருந்த மாறுபட்ட இசைப் பாடல்கள் முரிப்பாடல்கள் ஆகும். வல்லவாறு = இயன்ற அளவுக்கு. இசையுடன் திருமுறை பாடல்கள் பாட வேண்டும் என்று திருமுறைப் பதிகங்களில் கூறப்படுகின்றது. நம்மில் சிலருக்கு இசையுடன் பாடல்கள் பாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்படலாம். அதனால் தேவாரப் பாடல்களை இசைத்து படுவதற்கு தயக்கம் ஏற்படலாம். அத்தகைய தயக்கத்திற்கு இடம் கொடுக்காமல், நம்மால் இயன்ற அளவுக்கு நம்மை இசைத்துப் பாடச் சொல்லத் தூண்டும் பாடல். காலத்தாலே பாட வேண்டும் என்று சொல்லி, ஒவ்வொரு காலத்திலும் இறைவனைப் பணிந்து பாடுமாறு நமக்கு உணர்த்துகின்றார்.

இவ்வாறு இயன்ற வரையில் இசையுடன் இணைத்துப் பாடலாம் என்று அப்பர் பிரான் நம்மை ஊக்குவிப்பது, ஞானசம்பந்தப் பெருமானின் சோற்றுத்துறை பதிகத்தின் கடைப் பாடலை (1.28.11) நினைவூட்டுகின்றது. தங்களின் திறமைக்கு ஏற்றவாறு, இசைப் பாடல்களைப் பாடுதல் வழிபாடாக கருதப்படும் என்று சம்பந்தர் கூறுகின்றார்.

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்தவாறே புனைதல் வழிபாடே

வைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலிலும் சம்பந்தப் பெருமான், இவ்வாறு நம்மை ஊக்கப்படுத்துவதை நாம் காணலாம். அடிக்கடி கோழையால் அடைக்கப்படும் தொண்டையை உடையவர்களாக இருந்தாலும் சரி, பாடும் பாடலை பொருள் கொள்ளும் வகையில் நிறுத்திப் பாடுதல் அறியாதவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அடியார்களாக இருந்து பக்தியுடன் பாடும் பாடல்கள் எந்த தரத்தில் இருந்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் மகிழ்ந்து ஏற்றுக்கொள்பவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் (3.71.1) சம்பந்தர் கூறுகின்றார். கோளும் இலவாக = பிரித்து பொருள் கொள்ளும் வகையில் அமையாத முறை:

கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடமாம்

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி

வாழை உதிர் வீழ்கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே

யானையின் பசுந்தோலை போர்த்துக்கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆனால் நஞ்சினை உண்டு, நஞ்சின் செயலற்றுப் போகுமாறு செய்த, சிவபெருமானைத் தவிர வேறு எவர்க்கும் யானையின் பசுந்தோலை உடலில் போர்த்துக்கொள்ளும் வல்லமை இல்லை என்பதை உணர்த்தும் வகையில். கரியுரி மூட வல்ல கடவுள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

நெஞ்சமே, வரிமுரி எனப்படும் பலவகையான இசைப் பாடல்களை உன்னால் இயன்ற அளவுக்கு, யானையின் பசுந்தோலைத் தனது உடலில் போர்க்கும் வல்லமை வாய்ந்த சிவபெருமானின் பெருமைகளை ஒவ்வொரு காலத்திலும் பாடுவாயாக. சுருண்டும் முருக்கடைந்தும் விரிந்தும் காணப்படும் கூந்தலையும், துடி போன்று சிறுத்த இடையினையும், கடல் போன்று பரந்த மார்பினையும் உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டுள்ள சிவபெருமானார் திருவதிகைத் தலத்தில் வீரட்டராய் விளங்குகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை