நீதியால் நினை செய் நெஞ்சே நிமலனை நித்தமாகப்
பாதியாம் உமை தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை
சோதியாய் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண்ணீறு அதாடி
ஆதியாய் ஈறும் ஆனார் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

நீதி = சிவபெருமானை எவ்வாறு வழிபடுவது என்று வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் கூறப்படும் நெறிமுறை: தனது நெஞ்சத்திற்கு அப்பர் பிரான் அறிவுரை கூறுவதாக இந்த பதிகம் அமைந்திருந்தாலும், நமக்கு அப்பர் பிரான் அறிவுறுத்தும் பதிகம். சென்ற பாடலில் ஒவ்வொரு காலத்திலும் இறைவனைப் புகழ்ந்து பாடுமாறு, தனது நெஞ்சினுக்கு கட்டளையிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் தினமும் பாடுமாறு பணிக்கின்றார். நிமலன் = மலங்களின் தொடர்பு இல்லாதவன்.

பொழிப்புரை

நெஞ்சமே, வேதங்களிலும் சைவ ஆகமங்களிலும் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவ்வாறு, இயல்பாகவே மலங்களின் தொடர்பு அற்ற சிவபெருமானை, தினமும் வழிபட்டு தியானம் செய்வாயாக. பார்வதி தேவியை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ளவரும், சோதியாகவும், ஞான விளக்காகவும் உள்ள சிவபெருமான், சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில் பூசி, தான் உலகுக்கு ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் நிலையை உணர்த்துகின்றார். இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக உள்ள சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை