ஏறேறி ஏழுலகும் உழி தர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே
பாறேறு படுதலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே
நீறேறு செழும் பவளக் குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக் கண் நிறைவித்தானே
ஆறேறு சடைமுடி மேல் பிறை வைத்தானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

பாறு = பருந்து: உழிதர்தல் = சுற்றி வருதல், திரிதல்;

பொழிப்புரை

சிவபெருமான் தனது வாகனமான எருதின் மீதேறி, உலகங்கள் அனைத்தும் சுற்றி வருபவர்: அவர் தேவர்கள் அனைவரும் தொழுது துதித்து வணங்குமாறு இருக்கின்றார்; உலர்ந்த தசைப் பகுதிகளை உண்பதற்காக பருந்துகள் வந்து அமரும் பிரமனின் தலையில் பலி ஏற்பவர் சிவபெருமான்; அகலமான தனது மார்பினில். படம் எடுத்து ஆடும் பாம்பினை எப்போதும் வைத்திருப்பவர் சிவபெருமான்; சிவந்த பவளக் குன்றினை ஒத்த உடலின் மீது திருநீறு அணிந்து காணப்படுபவர் சிவபெருமான்; தனது நெற்றியில் ஒரு கண்ணை வைத்து நெற்றியை நிறைவு செய்தவர் சிவபெருமான்; கங்கை ஆற்றினைத் தாங்கிய சடைமுடியில், பிறைச் சந்திரனைச் சூடியவர் சிவபெருமான்; இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை