செய்யனே கரியனே கண்டம் பைங்கண் வெள்ளெயிற்று ஆடு அரவனே வினைகள் போக
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற்காய்ந்த
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

செய்யன் = சிவந்த நிறம் உடையவன்; பைங்கண் = பசுமையான, இளமையான கண்; அரவன் = பாம்பினைச் சூடியவன்; எயிறு = பற்கள்; வெய்யன் = சுட்டெரிப்பவன்; மிலைத்த = சூடிய; கண்டம் = கழுத்து; இந்த சொல், கரியனே என்ற சொல்லுக்கும் பைங்கண் வெள்ளெயிற்று ஆடு அரவனே என்ற தொடருக்கும் இடையில் வருவதால், இரண்டிற்கும் பொருந்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொடும் = வளைந்த: பூண் = அணிகலன்

பொழிப்புரை

சிவபெருமான் சிவந்த நிறத்தை உடையவன்; விடம் உண்டதால் கரிய நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவன்; அவன் தனது கழுத்தினைச் சுற்றி, பசுமையான கண்களையும், நீண்டு வளைந்த பற்களையும் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பினை அணிந்தவன்; தன்னை வழிபடும் அடியார்களின் வினைகளைச் சுட்டெரிக்கும் வல்லமை படைத்தவன்; குளிர்ந்த கொன்றை மலர்களைத் தனது சடையில் சூடியவன்; மழு எனப்படும் சூலத்தை கையில் ஏந்தியவாறு காட்சி அளிப்பவன்; இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களாகவும் உள்ளவன் கரும்பு வில்லினை ஏந்தியும், வளைந்த அணிகலனாகிய கழலினை அணிந்து தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனை சுட்டெரித்தவன்; உயர்ந்தும் பருத்தும் வலிமையாக காணப்படும் எருதினைத் தனது வாகனமாக கொண்டவன்; இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை