பாடுமே ஒழியாமே நால் வேதம்மும் படர்சடை மேல் ஒளிதிகழப் பனி வெண் திங்கள்
சூடுமே அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகம்
கூடுமே குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறு பூதம் முழக்க மாக் கூத்து
ஆடுமே அந்தடக்கை அனல் ஏந்துமே அவனாகில் அதிகை வீரட்டனாமே

விளக்கம்

ஒழியாமே = இடைவிடாது: தொண்டை = கோவைக்காய்; அந்தடக்கை = அம்+தடம்+கை = அழகிய நீண்ட கை; இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமான் ஆடும் கூத்தினை, மேம்பட்ட கூத்து என்ற பொருளில் மாக்கூத்து என்று கூறுகினார். ஐந்து தொழில்களையும் புரிந்த வண்ணம் ஆடும் கூத்து என்பதால் மேம்பட்ட கூத்து என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரு செயலைச் செய்துகொண்டே ஆடினால் அதற்கு தாண்டவம் என்று பெயர். இங்கு கூத்தன், ஒரு செயலை அல்ல ஐந்து செயல்களையும் ஒரே சமயத்தில் செய்து கொண்டு ஆடுவதாக கூறப்படுகின்றது. அவையாவன, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகும். ஐந்து தொழில்களை செய்து கொண்டு ஆடும் ஆட்டம், அனைவருக்கும் ஆனந்தம் தருவதால் ஆனந்த தாண்டவம் எனப்படுகின்றது. நாதத்திலிருந்து படைப்பு தோன்றியதாக ஐதீகம். நாதம் எழுப்பும் உடுக்கை படைப்பு தொழிலையும், அபய ஹஸ்தம் காட்டும் வலது கரம் காக்கும் தொழிலையும், கையில் ஏந்திய தீச் சுடர் அழிக்கும் தொழிலையும் முயலகன் மேல் ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும் தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவர்

பொழிப்புரை

இடைவிடாது நான்கு வேதங்களையும் பாடுபவராகத் திகழும் சிவபெருமான் தன்னுடைய, படர்ந்த சடையின் மேல் ஒளி வீசித் திகழுமாறு, குளிர்ச்சி பொருந்தியதும் வெண்மை நிறம் உடையதும் ஆகிய சந்திரனை சூடியுள்ளார். அவர் தனது இடையில் சுற்றியுள்ள புலித் தோலின் மீது பாம்பினை இறுகக் கட்டியுள்ளார். அவர் தனது உடலின் இடது பாகத்தில், கோவைக்கனி போன்று சிவந்த உதடுகளை உடைய உமையம்மையை கொண்டுள்ளார். சிறிய அளவிலான அடிகள் எடுத்து வைத்து ஆடும் பூத கணங்கள், குடமுழவம், வீணை, தாளம் ஆகிய இசைக் கருவிகளை முழக்க, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை புரிந்தவாறு மேம்பட்ட கூத்தினை அவர் ஆடுகின்றார். இவ்வாறு ஆடும் பெருமான், தனது அழகிய நீண்ட கையினில் தீப் பிழம்பினை ஏந்தியவாறு ஆடுகின்றார். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை