சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

7. வெறிவிரவு கூவிள - பாடல் 7

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி

Updated On :20 நவம்பர் 2015, 6:46 am

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி
உண்டி உகந்து அமணே நின்றார் சொல் கேட்டு உடனாகி உழிதந்தேன் உணர்வு ஒன்றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணியானை வானவர்கள் ஏத்தப் படுவான் தன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

குண்டாக்கன் = மிகுதியான குண்டு உடலை உடையவன்; அமணே நின்று = உடையில்லாமல் நின்று; உழன்று = திரிந்து; குவி முலையார் = குவிந்த முலையை உடைய பெண்கள், இளைய பெண்கள்.

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு குவி முலையார் தம் முன்னே நாணமின்றி

உண்டி உகந்து அமணே நின்றார் சொல் கேட்டு உடனாகி உழிதந்தேன் உணர்வு ஒன்றின்றி

வண்டுலவு கொன்றையங் கண்ணியானை வானவர்கள் ஏத்தப் படுவான் தன்னை

எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

பொழிப்புரை

பருத்த உடலை உடையவனாய், பல இடங்களிலும் திரிந்து கையில் சோற்றினை வாங்கி உண்பவனாக, உடை ஏதும் அணியாமல் இருந்ததற்கு நாணாமல் இளைய பெண்களின் முன்னே சென்று அவர்கள் தரும் உணவினில் நாட்டம் கொண்டவனாக இருந்த நான், உடையினைத் துறந்த சமண துறவிகளின் சொற்களைக் கேட்டு அவர்களுள் ஒருவனாக, அவர்களைப் போன்று அவர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றி, நல்ல உணர்வுகள் ஏதும் இன்றி வாழ்ந்தேன். அவ்வாறு வாழ்ந்த நாட்களில், வண்டுகள் சூழும் கொன்றை மாலையினை அணிந்த சிவபெருமானை, தேவர்களாலும் துதிக்கப்படும் பெருமானை, எண்திசைக்கும் தலைவனாக இருக்கும் மூர்த்தியை, எனது அறிவீனத்தால் இகழ்ந்தேன். எனது செயல் மிகவும் பரிதாபமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.