உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய்ச் சமணர்க்கோர் குண்டாக்கனாய்
கறிவிரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்
மறிதிரைநீர்ப் பவ்வ நஞ்சு உண்டான் தன்னை மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

குண்டாக்கன் = மிகுதியான குண்டு உடலை உடையவன்; உடலில் மாசு படிந்து, உடை ஏதும் இன்றி திரியும் நிலை காண்பவர்களின் மனதினில் வெறுப்பினை உண்டாக்கியதால், கண்டார்க்கு பொல்லாத காட்சி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது கையினில் குண்டிகை, பாய், மயிலிறகு ஆகியவை கொண்டு, தாம் செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்வது சமண குருமார்களின் பழக்கம். தருமசேனராக பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்த அப்பர் பிரான், குண்டிகை, பாய், மயிலிறகு போன்றவற்றை தம்முடன் வைத்திருந்தார் என்பதை பெரியபுராணப் பாடலிலிருந்து நாம் உணர்கின்றோம். கொடிய சூலை நோயினால் வருந்தும் தன்னருகே, தனது தமக்கையார் இருந்தால் ஏதேனும் நல்ல தீர்வு சொல்லுவார் என்ற நம்பிக்கையில், அவரை அழைத்துவர தனது ஏவலாள் ஒருவனை, தருமசேனர் திருவதிகை நகரத்திற்கு அனுப்புகின்றார். நன்றி இல்லாத அமணர் இருக்கும் இடத்திற்கு தான் வரமாட்டேன் என்று தமக்கையிடமிருந்து பதில் கிடைத்ததும், வேறு வழியின்றி, தானே தனது தமக்கை இருக்கும் அதிகை நகருக்குச் செல்லத் துணிந்த தருமசேனர், தான் படுத்திருந்த பாயினையும், உறியுடன் கூடிய குண்டிகையையும், மயில்பீலியையும் விடுத்ததாக சேக்கிழார் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சமணர்களை விடுத்து திருவதிகை செல்ல வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில், அப்பர் பிரானின் உடல் தளர்ச்சி நீங்கியது என்று சேக்கிழார் கூறுகின்றார். குண்டிகை = கஞ்சி வைக்கப்படும் பாத்திரம்; உறியில் முடித்த குண்டிகை = ஈ, எறும்பு முதலான சிறிய உயிர்கள் உணவுப் பாத்திரத்தில் விழுந்து இறப்பதை தடுப்பதற்காக, உயரமான இடத்தில் கட்டி தொங்கவிடுவதற்கான அமைப்பு;

எடுத்த மனக்கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி

அடுத்தலுமே அயர்வு அது ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு

உடுத்து உழலும் பாய் ஒழிய உறியுறு குண்டிகை ஒழியத்

தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்கு துணிந்து எழுந்தார்

சமணர்களுடன் பல வருடங்கள் கலந்து வாழ்ந்தவர் என்பதால் அவர்களது வாழ்க்கை முறையினை நன்கு அறிந்த அப்பர் பிரான் திருப்புங்கூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.11) அவர்கள் உணவு உட்கொள்ளும் முறையினை விவரிப்பது இங்கே நினைவு கூரத்தக்கது. கையில் உள்ள உணவினை உண்பதற்காக கைகளை மேலே தூக்கிச் சென்றால், உணவில் கலந்த நெய் வழிந்தோடிவிடும் என்பதால், கழுத்தினை வளைத்து தலையைத் தாழ்த்தி கையருகே கொண்டு செல்லும் பழக்கம் உடையவர்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நிலை குலையாமல் இருப்பதற்காக கால்களை அகற்றி வைத்து நிற்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகிறார். கலத்தினில் உண்ணாமல் கையினில் உணவு உட்கொள்ளுதல் ஒரு பொருளின் மேல் பற்றற்று வாழும் தன்மையையும் நின்று உண்பது ஒரு இடத்தின் மீதும் பற்று கொள்ளாமல் வாழும் கொள்கையையும் உணர்த்துவது ஆகும். சமண சமயத்தின் பிடியிலிருந்து தான் மீண்டதை, வேடர்களிடம் அகப்பட்ட பறவை தப்பியதற்கு அப்பர் பிரான் ஒப்பிடுவதை நாம் இந்த பாடலில் காணலாம்.

கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்டக் கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன

பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன்

செய் எலாம் செழும் கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை

நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையாவாறே

மறி = மடிந்த: திரை = அலைகள்; தொடர்ந்து வரும் கடலலைகள், மடிந்து விழுவதைப் போன்று தோற்றம் அளிப்பதால் மறிதிரை நீர் என்று கூறுகின்றார். பவ்வம் = கடல்; மறித்து ஒருகால் = மீண்டும் ஒரு முறை; சைவ பரம்பரையில் வந்த தான் சிறு வயதில் சிவபெருமானை வணங்கி வழிபட்டபோதும், சமண சமயத்தில் வீழ்ந்த பின்னர் சிவபெருமானை நினையாது இருந்த நிலை:

பொழிப்புரை

உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் செல்லும் சமணர்களுடன், ஊத்தை வாயுடன் திரியும் சமணர்களுடன் கலந்து வாழ்ந்த நானும் அவர்களைப் போன்று பருத்த உடலைக் கொண்டவனாக, கறியோடு நெய் கலந்த சோற்றினை கையில் ஏந்தி உண்பவனாக, காண்பவர்கள் வெறுக்கத்தக்க காட்சிப் பொருளாக இருந்தேன். என்னைப் பற்றியிருந்த வினையின் காரணமாக சமண சமயத்தைச் சார்ந்த நான், சிறு வயதில் வணங்கி வழிபட்ட சிவபெருமானை, மறுபடியும் நினைக்காமல் இருந்தேன். தொடர்ச்சியாக மடிந்து வீழும் அலைகள் புரண்டு வரும் கடலிலிருந்து எழும் நஞ்சினை உண்டு உலகத்தை காத்த சிவபெருமானை, அலைகள் மோதும் கெடில நதி பாயும் நாட்டிற்கு தலைவனான சிவபெருமானை, பண்டைய நாட்களில் நான் இகழ்ந்தேன். இது மிகவும் பரிதாபமான செயல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை