சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 10

பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும்

Updated On :3 அக்டோபர் 2015, 7:25 am

நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே

விளக்கம்

தென்திசைக் கோன் = இயமன்

நாணற்றார் = நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள்

கோ ஆடி = தலைமைத் தன்மையை உரைத்து

நள்ளாமே விள்ளப் பெறுதல் = விரும்பாது விலகும் நிலை.

பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன, எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று முழங்குவதை நாம் உணரலாம்.

உயிர்கள் அழிவற்றவை என்பது சைவ சித்தாந்தக் கருத்து. முற்பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கேற்ப உயிர்கள் வெவ்வேறு உடல்களுடன் பொருத்தப்படுகின்றன. அவ்வாறு பொருத்தப்படும் உயிர்கள், மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து தங்களின் அறிவை மறைத்திருக்கும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு, மலநீக்கம் பெற்றுத் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத பேரின்பம் பெறவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இதுதான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உயிர்களுக்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்களை (ஐம்பூதங்கள், சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகள், கை, கால், நாக்கு, எருவாய், கருவாய் எனப்படும் ஐந்து கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனப்படும் நான்கு அகக் கருவிகள், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனப்படும் ஏழு வித்தியா தத்துவங்கள், சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் ஆகிய ஐந்து சிவத்தத்துவங்கள்) அளிக்கின்றான்.

இவைகளை முறையாக பயன்படுத்தி, சிவபிரானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு, சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாக வகுக்கப்படுகின்றன. அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது அவற்றின் மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதை உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும் நிலை சிவக்கலப்பு எனப்படும். தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார்.

சிவபெருமானின் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகியவை ஆகும்.

இந்த நிலையினை மிகவும் சுருக்கமாக திருமூலர் பின்வரும் பாடலில் கூறுகின்றார்

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்

சிவசிவ வாயுவும் தேர்ந்து உள்ளடங்க

சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்

சிவசிவம் ஆகும் திருவருளாமே

சிவசிவ என்று சொல்லிச் சிவபரம்பொருளைச் சிந்திப்பதில் உள்ள பயன்களை, நன்மைகளை அறியாதவர்கள், வாயிருந்தும் பேச இயலாத ஊமைகள் ஆவார்கள். சிவசிவ என்று சிந்திக்க, மனமும் மூச்சுக் காற்றாகிய பிராணனும் அலை பாயாது, குவிந்து ஒருமுகப்பட்டு உள்ளடங்கி நிற்கும். இந்த நிலையில் சிவசிவ என்ற மந்திரத்தின் உயர்வினை உணர்ந்து அறிந்தவர்கள், இறைவனின் திருவருளால் சிவவடிவாக மாறுவார்கள் என்று திருமூலர் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இந்த நிலையினை அப்பர் பிரான் அடைந்ததை நாம் இந்த பதிகம் மூலம் உணர்கின்றோம்.

பொழிப்புரை

எமது நாவார, அதாவது நாக்கு இன்பம் பெற, சிவபெருமானது புகழினைப் பாடப் பெற்றோம்; அதனால் நாணம் ஏதும் இன்றி உடையில்லாமல் திரியும் சமணர்கள் எம்மை விரும்பாது விலகினார்கள்; ஆனால் அமரர் தலைவனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்வான்; பிரமனும், திருமாலும் அறிதற்கு அரிய வகையில், அனற்பிழம்பாகத் தோன்றியவனும், தேவர்க்குத் தேவனும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் நீங்காது இருந்தமையால், யாம் அவனுடன் வேறறக் கலந்து நின்று அவனைப் போன்று எண்குணங்கள் உடையவனாக மாறிவிட்டோம்; எனவே தென்திசைக்கு அதிபதியாகிய இயமனே நேரில் வந்து, தனது தலைமைத் தன்மைகளை எனக்கு உணர்த்தி, தனக்கு குற்றேவல் செய்க என்றாலும் நாம் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

முடிவுரை

திருநாவுக்கரசரின் மறுமொழியைக் கேட்ட மந்திரிகள், அவரிடம் தங்களின் நிலையை, அதாவது அவரை அழைத்துச் செல்லாவிடின் மன்னன் கோபம் கொள்வான் என்ற நிலையை, அவரின் திருவடிகளை வணங்கி விளக்கினார்கள். மேலும் அவரைத் தங்களுடன் வருமாறு வேண்டினார்கள். மற்றவருக்கு துன்பம் ஏதும் வரத் தான் காரணமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், தனக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் அப்பர் பிரான் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார். இந்த செய்தியைக் கூறும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட அரசு அருள் செய்யக் கேட்ட அவரும் அடி வணங்கி

வேண்டி அவர்க் கொண்டேக விடை உயர்த்தார் திருத்தொண்டர்

ஈண்டு வரும் வினைகளுக்கு எம் பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்

மூண்ட சினப்போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்

சமணர்கள் வஞ்சனையால் திருநாவுக்கரசரை அழிக்கத் தீட்டிய பல சூழ்ச்சிகளிலிருந்தும் சிவபெருமான் அருளால் அப்பர் பிரான் தப்பினார். பல்லவ மன்னனும் அவரது பெருமையை உணர்ந்து, தானும் சைவ சமயம் மாறியதும் சைவம் மறுமலர்ச்சி அடைந்ததும் சரித்திரம். அந்தச் சரித்திரத்தின் முதல் பகுதியை, மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகம் அருளப்பட்ட சூழ்நிலையை, வரும் நாட்களில் நாம் சிந்திப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.