நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவன் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே

விளக்கம்

நடலை = துன்பம்

சுடலை = சுடுகாடு

சொல் பிரமாணம் = சான்றோர்களின் வாக்கு

முனி பண்டம் = வெறுக்கத் தகும் பொருள்.

இந்தப் பாடலும் சிவபிரானின் திருவடிகளை நினையாதோரை குறித்து பாடிய பாடலாகும். நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் சிவபிரானின் திருவடியைச் சார்ந்து தான் வாழ்வதால், இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்று கூறுகின்றார்.

நமக்கு இன்பம் தருபவை போல் தோன்றும் எவையும் இறுதியில் நமக்கு துன்பம் பயப்பவையே. மேலும் உலக இன்பங்கள் நிலையானவை அல்ல. உலக இன்பங்களில் மயங்கி நாம் இறைவனை உணராமல், நமது வினைகளை மேலும் பெருக்கிக் கொண்டு, நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப, இறந்த பின்னர் மறுபடியும் பிறந்து உலக வாழ்க்கையில் சிக்குகின்றோம். எனவே தான் இந்த வாழ்வினை நடலை வாழ்வு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபிரானை வழிபட்டு நாம் முக்தி அடையும் நிலையை எய்தினால், நமக்கு பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுதலையும், என்றும் நீங்காத பேரின்பமும் கிடைக்கும். ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு உடலுக்கு இகழ்ச்சி குறிப்பு ஏற்றப் பட்டுள்ளது.

பிறப்பெடுத்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டியது என்பது உலக நியதி. இதனை சான்றோர்கள் வாக்கு எடுத்துரைக்கின்றது. மேலும் நாமும் நமது வாழ்க்கையில், நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இறப்பதைக் காணும்போது, அனுபவ பூரணமாக இந்த உண்மையை உணருகின்றோம்.

பொழிப்புரை

நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத்தக்கது என்பதால், சிவபிரான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வழிகாட்டி உதவுங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை