பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

திருநாவுக்கரசர், சமண மதத்தை நிந்தனை செய்தார் என்று சமண குருமார்கள் கொடுத்த புகார் மீது திருநாவுக்கரசரை அரசவைக்கு அழைத்த மன்னன், அவரை ஏதும் விசாரிக்காமல் அவருக்குப் பல தண்டனைகள் அளித்தான். இதனால், நடுநிலையிலிருந்து தவறி ஒருபட்சமாகத் தண்டனை அளித்த பல்லவ மன்னனின் புகழுக்குக் களங்கம் ஏற்படுகின்றது.

தான் பெற்ற தண்டனைக்குக் காரணமாகிய அரசனின் இந்தத் தன்மையை நினைவுகூறும் அப்பர் பிரான், பல்லவ மன்னன் நடுநிலை தவறினான் என்ற செய்தியை மறைமுகமாக இங்கே குறிப்பிட்டாலும், அரசன் மீது கோபமாக ஏதும் சொல்லவில்லை. மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், சமணர்களையும், சிவபிரானை வழிபடாதவர்களையும் இழித்துப் பேசும் அப்பர் பிரான், இந்த நமச்சிவாயப் பதிகத்தில், எவரையும் இழித்துக் கூறாதது இந்தப் பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாக, பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில், பிரம்மனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே. சிவபெருமான் விரும்பி நீராடும் ஐந்து பொருட்களைத் தருவதால் (பால், தயிர், நெய், பசுஞ்சாணம் மற்றும் கோமியம் ஆகியவையே இந்த ஐந்து பொருட்கள்) பசு சிறப்புத் தன்மை பெறுகின்றது.

நடுநிலை தவறாமல் இருப்பது அரசர்க்கு அழகு என்று பல இலக்கியங்களில் கூறப்படுகிறது. செங்கோல் வளைந்தது என்றால், அரசன் நடுநிலை தவறிவிட்டான் என்று பொருள். கோணாத கோல் என்று வளையாத செங்கோலினை உணர்த்தும் அபிராமி பட்டர், அபிராமி பதிகத்தின் ஒரு பாடலில், அபிராமி அம்மையிடம் வேண்டும் பொருட்களில் ஒன்றாக, கோணாத கோலினைக் குறிப்பிடுகின்றார். அபிராமி அம்மையின் பாதங்களைத் தொழும் தொண்டர்களுக்குக் கிடைக்கும் பேறுகள் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக, கோணாத கோல் என்று குறிப்பிடப்படுவதால், எவ்வளவு உயர்வாக நடுநிலை தவறாத அரசன் மதிக்கப்பட்டான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கன்றாத வளமை என்றால், வற்றாத செழுமை என்று பொருள். துய்த்தல் என்றால். அனுபவித்தல் என்று பொருள். தான் தூங்கிக்கொண்டு இருந்தாலும், உலகில் நடப்பவை அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர் திருமால் என்பதால், அவரது தூக்கம் அறிதுயில் என்று கூறப்படுகிறது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே

பொழிப்புரை

பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம்போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை. அதேபோல், அரசர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்துகொள்ளும் தன்மை. நமது நாக்குகளுக்கு அரிய ஆபரணம்போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

பிக்பாஸ் பிரபலம் மீது தாக்குதல்: கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மீது போலீஸில் புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை