வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

விளக்கம்

வீடினார் - உலகப் பற்றினை விட்டவர்கள்

விழுமிய - சிறந்த

சமண சமயம் சார்ந்து இருந்த நேரத்தில், தானுற்ற சூலை நோயினைத் தீர்க்கும் வழி தெரியாமல் திகைத்தபோது, சிவபிரானின் அடியாராகிய தனது தமக்கையாரைப் பற்றி, அவரைப் பின்தொடர்ந்து திருவதிகை திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு, சூலை நோய் தீர்ந்து நன்மை அடைந்த நிலை, இங்கே குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

அவனது அருளால் சிவபிரானின் உருவத்தைத் தான் தெரிந்துகொண்ட பின்னர், அவனது திருநாமத்தை இடைவிடாது பயின்று, வாயார நமச்சிவாய என்ற நாமத்தைச் சொல்லி திருநீறு அணிந்துகொண்டதாக, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

பொழிப்புரை

வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று, அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

பிக்பாஸ் பிரபலம் மீது தாக்குதல்: கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மீது போலீஸில் புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை