22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 9

பல ஊழிகளைக் கடந்து நிற்கும் சீர்காழி தலத்தின் இறைவனாக இருப்பவனும், பெருமையை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மேல்

Updated On :19 ஏப்ரல் 2016, 10:05 am

பாடல் 9

காழியானைக் கனவிடை ஊரு மெய்
வாழியானை வல்லோரும் என்று இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

கனவிடை = பெருமையை உடைய இடபம். மெய் வாழியான் = உடல் நிலையாக வாழும் தன்மையை உடையவன், மற்றவர்களது உடல் அழியும் தன்மை உடையது.

பொழிப்புரை

பல ஊழிகளைக் கடந்து நிற்கும் சீர்காழி தலத்தின் இறைவனாக இருப்பவனும், பெருமையை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஊர்பவனும், அழியும் தன்மை கொண்ட மற்றவர்களின் உடல் போலன்றி நிலையாக வாழும் உடலினை உடையவனும், வல்லவர்கள் என்று நாம் கருதும் பிரமனும் திருமாலும் ஊழிக்காலத்தில் ஒடுங்கும் இடமாகத் திகழ்பவனும் ஆகிய அரத்துறை காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.