பாடல் 10
கலை ஒப்பானைக் கற்றாற்கு ஓர் அமுதினை
மலை ஒப்பானை மணிமுடி ஊன்றிய
அலை ஒப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

கலை = அறியாமையை நீக்கி, மக்களின் அறிவினை நல்லதன் கண் செலுத்துவது. இறைவன் உயிர்களின் அறியாமையை நீக்கி, உயிர்களின் அறிவினை போகத்திலும் இறையுணர்விலும் செலுத்துபவன் என்பதால் கலை இறைவனுக்கு உவமையாக சொல்லப்படுகின்றது. மலை = எல்லா வளங்களையும் தன் பால் கொண்டு, உயர்ந்து ஓங்கி நிற்பது மலையின் குணம். இறைவனும் எல்லா நற்குணங்களையும் கொண்டு, எல்லா வளங்களையும் உடையவனாக, அனைவரிலும் உயர்ந்தவனாக ஓங்கி நிற்பதால், இறைவனுக்கு உவமையாக மலை சொல்லப்படுகின்றது. மலை பல ஜீவநதிகளுக்கு பிறப்பிடமாகவும், மாணிக்கம் போன்ற விலை மதிப்பற்ற கற்களை உடைத்ததாகவும், பல அரிய மூலிகைகளைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. அலை என்பது இங்கே கடலைக் குறிக்கும். கடலின் மற்றோர் கரையினை நம்மால் காணமுடியாது. அது போன்று இறைவனும் எல்லைகளைக் கடந்தவன். கடலினில் நீந்தி மூழ்க வல்லார்கட்கு, முத்து போன்ற அரிய செல்வங்களைக் கொடுப்பது. இறைவனும், இறையுணர்வில் ஊறி திளைக்கும் அன்பர்களுக்கு, வீடுபேறு எனப்படும் உயர்ந்த செல்வத்தை அளிப்பவன்.

பொழிப்புரை

உயிர்களின் அறியாமையை நீக்கி, உயிர்களை இறையுணர்விலும் போகத்திலும் செலுத்துவதில் கலை போன்றவனும், சிவநெறியினைக் கற்றவர்களுக்கு அமுதமாக இனிப்பவனும், பல நற்பண்புகளைக் கொண்டு, வளங்களைக் கொண்டு, அனைவரையும் விடவும் ஓங்கி உயர்ந்து நிற்பதில் மலை போன்றவனும், எங்கும் பரந்து காணப்படும் நிலையிலும், தன்னுள் மூழ்கித் திளைக்கும் அடியார்களுக்கு வீடுபேறு எனப்படும் உயர்த்த செல்வதை அளிப்பதில் கடல் போலவும், இருக்கும் இறைவன் அரத்துறை தலத்தில் நிலைபெற்று இருக்கின்றான். அந்த இறைவனை காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்.

முடிவுரை

இந்த பதிகத்தின் பல பாடல்களில் சிவபெருமானை விண்ணோரும் அறிகிலார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். விண்ணோரும் அறிய முடியாத ஆற்றல் படைத்தவனை மனிதர்களாகிய நாம் எவ்வாறு அறிவது. நாம் அவனை அறிந்துகொள்வதற்குத்தான், அவனது தன்மையை புரிந்து கொள்வதற்காகத் தான், ஒப்பில்லாதவனாக இறைவன் திகழ்ந்தாலும், நாம் அறிந்த உலகப் பொருட்களைச் சுட்டிக்காட்டி அப்பர் பிரான் விளக்கும் நேர்த்தியை நாம் இந்த பதிகத்தில் காணலாம். மேலும் விண்ணோர்களும் அறிய முடியாத இறைவனை, நாம் எப்படி அறிவது என்பதையும் உணர்த்தும் பாடல்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம். அப்பர் பிரான் அறிவித்த வண்ணம், அவனது தன்மையை, பண்பினை நாம் புரிந்துகொண்டு, அவனைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை