நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி நடுவாய் உலக
நாடாய அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி தீத்திரளாய்
உள்ளே திகழ்ந்த அடி
மறுமதியை மாசு கழுவும் அடி மந்திரமும்
தந்திரமும் ஆய அடி
செறிகெடில நாடர் பெருமான் அடி திருவீரட்டானத்து
எம் செல்வன் அடி

விளக்கம்

செறி = நிறைந்த, நீர்வளம் நிறைந்த கெடில நதி. நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி = மலரின் நறுமணம் எங்கும் பரந்திருப்பதை நாம் பார்க்கமுடியாது. ஆனால், நறுமணம் காற்றில் எங்கும் பரவியிருப்பதை நாம் உணருகின்றோம். அதேபோன்று பெருமானின், உலகெங்கும் பரவி அனைத்துப் பொருட்களிலும் கலந்தும், அனைத்து உயிர்களுடன் இணைந்தும் உள்ள நிலையினைக் காண முடியாது எனினும் உணரலாம் என்பது இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

நீர் நிறைந்த கெடில நாட்டின் பெருமானும் அதிகை நகரத்து வீரட்டானத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகள், காற்றில் பரவி எங்கும் கலந்திருக்கும் நறுமணம் போன்று, உலகத்தின் அனைத்து இடங்களிலும் நிறைந்து உள்ளது. அந்த திருவடிகள் அனைவராலும் மலர்கள் தூவி அர்ச்சிக்கப்படுகின்றன. நடுநிலையாக இருந்து அறத்தையும் நீதியையும் நிலைநாட்டும் திருவடிகள். ஒளி செறிந்து விளங்கும் சூரியனாகவும் சந்திரனாகவும் திகழும் திருவடிகள். யோகியர் உள்ளத்தில், ஒளிப் பிழம்பாய் திகழ்ந்து அவர்களின் உள்ளத்து ஒளியை பெருக்கும் திருவடிகள். தக்கன் செய்த யாகத்தில் பங்குகொண்டதால் சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவிய திருவடிகள். மந்திரங்களாகவும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறைகளாகவும் திகழும் திருவடிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை