அந்தாமரைப் போது அலர்ந்த அடி அரக்கனையும்
ஆற்றல் அழித்த அடி
முந்தாகி முன்னே முளைத்த அடி முழங்கழலாய் நீண்ட
எம் மூர்த்தி அடி
பந்தாடு மெல்விரலாள் பாகன் அடி பவளத் தடவரையே
போல்வான் அடி
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல்
விமலன் அடி

விளக்கம்

போது அலர்ந்த = புதியதாக மலர்ந்த மலர் போன்று. போது என்றால் பொதுவாக மலரைக் குறிக்கும் என்றாலும், இங்கே திருவடிக்கு உவமையாக சொல்லப்படுவதால், தாமரை மலரை குறிப்பதாகக் கொள்ள வேண்டும். முழங்கழலாய் நீண்ட அடி என்று, திருமால் தேடியபோது அவரால் உணரப்படாமல் நின்ற திருவடி என்று இங்கே உணர்த்தப்படுகின்றது. முழங்கு அழல் = ஒலியுடன் எரியும் தீப்பிழம்பு.

பொழிப்புரை

அதிகை வீரட்டத்தின் மீது காதல் கொண்டு அங்கே உறைகின்ற சிவபெருமானின் திருவடிகள், புதியதாக மலர்ந்த தாமரை மலர்கள் போன்று மென்மையானவை. அரக்கன் ராவணனின் ஆற்றலை அடக்கிய திருவடி. மற்றைய பொருட்களின் தோற்றத்திற்கு முன்னமே தோன்றிய திருவடிகள். ஒலியுடன் பெரிய தீப்பிழம்பாக நீண்ட திருவடிகள், பந்துகள் வந்து அணையும் மெல்லிய விரல்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும் சிவந்த பவளக் குன்று போன்று காணப்படும் உருவத்தை உடையவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகள், இறந்தவர்களின் சாம்பலை பூசிக்கொண்டு நடனமாடும் திருவடிகள் ஆகும்.

முடிவுரை

அப்பர் பிரான் இந்த பதிகத்தில் பெருமானின் திருவடிகளின் பெருமையை பாடியுள்ளது போன்று, திருவெம்பாவை பதிகத்தின் கடைப் பாடலில், மணிவாசகர், பாடலின் முதல் ஏழு அடிகளிலும் இறைவனின் திருவடிகளை போற்றி போற்றி என்று கூறி, எட்டாவது அடியில் சிவபெருமான் நம்மை ஆட்கொள்வதற்கு உதவியாக இருக்கும் மார்கழி நீராடும் செயல் போற்றி என்று கூறுகின்றார். இந்த பாடலில் இறைவனின் திருவடிகளை, பாதமலர், செந்தளிர்கள், பொற்பாதம், பூங்கழல்கள், இணையடிகள், புண்டரீகம், பொன்மலர்கள் என்று வேறு வேறு சொற்களால் குறிப்பிடும் நயத்தையும் நாம் காணலாம். எண்குணத்தான் என்று அழைக்கப்படும் இறைவனை எட்டு முறை போற்றி போற்றி என்று சொல்லி அழைப்பதும் மிகவும் பொருத்தமாக உள்ளது. இங்கே குறிபிட்டுள்ள போற்றித் திருத்தாண்டகத்தின் பெரும்பாலான பாடல்களில் அப்பர் பிரானும், எட்டு முறை போற்றி சொல்வதை நாம் உணரலாம்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்

மேற்கண்ட பாடலில் இறைவன் புரியும் ஐந்து தொழில்களும் உணர்த்துப்பட்டுள்ளன. தோற்றம் என்று படைத்தல் தொழிலும், போகம் என்று காத்தல் தொழிலும், ஈறு என்று அழித்தல் தொழிலும், காணாத புண்டரீகம் என்று மறைத்தல் தொழிலும், உயிர்களை உய்ய ஆட்கொண்டருளும் செயல் என்று அருளல் தொழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை