பாடல் 3
மழலை தான் வரச் சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே

விளக்கம்

காதல் வயப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அனைவருக்கும் தங்களது பெண் ஒன்றுமறியாத சிறிய பெண் என்று தோன்றுவது உலக இயற்கை. அப்பர் நாயகியின் தாயும் அவ்வாறே நினைப்பதை நாம் இந்தப் பாடலில் காணலாம். சற்றே மிகைப்படுத்தி, .தனது பெண்ணின் வயது மழலை மொழி மாறாத வயது என்றும், திருத்தமான சொற்களைப் பேசத் தெரியாத பெண் என்றும், தனது பெண்ணை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். ஏதும் அறியாத பெண்ணை, சிவபெருமான் மயக்கி அவளது மனத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான் என்பது தாயின் குற்றச்சாட்டு.

அகப்பொருள் வகையில் அமைந்த பாடல் என்றாலும், தங்களது ஆன்மாவினை பெண்ணாக உருவகித்து, அனைவருக்கும் ஆண்மகனாக திகழும் சிவபெருமானின் பால் காதல் கொண்டுள்ள ஆன்மாவின் நிலை இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது. சிவபெருமானே என்னை நீ இகழலாமோ என்று அப்பர் நாயகி கேட்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் பண்புகளால், அழகால் கவரப்பட்டு அவன் மீது காதல்கொண்டு, தங்களை சிவபெருமானுக்கு அர்ப்பணித்த ஆன்மாக்கள் மிகவும் அதிகமாக இருப்பதாலும், அந்த வரிசையில் தான் இப்போது தான் சேர்ந்ததால், தன்னை இகழ்ந்து சிவபெருமான் புறக்கணிப்பானோ என்ற அச்சம் தொனிப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.

தான் தன்னை பூரணமாக சிவபெருமானிடம் ஒப்புவித்தாலும், தான் புதியதாக சிவபெருமானை விரும்பும் பெண்ணாக இருப்பதால், தன்னை சிவபெருமான் இகழ்வாரோ என்ற அச்சம், அப்பர் நாயகிக்கு தோன்றுவதை, பழனம் பதியின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (4.12) முதல் பாடலில் வெளிப்படுவதை நாம் இங்கே காணலாம்.

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகு திங்கள் முகிழ் விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன் என் புதுநலம் உண்டு இகழ்வானோ

பொழிப்புரை

இன்னும் மழலை மாறாமால், திருத்தமான சொற்களைப் பேச அறியாமல், மிகுந்த இளைய வயதினளாக உள்ளவள் எனது மகள். குழலின் இனிமை ஒத்த குரலினை உடைய அவள் பேசிய சொற்களைச் சொல்கின்றேன், நீங்கள் கேளுங்கள். அழகனே, கழிப்பாலை அண்ணலே, என்னையும் எனது காதலையும் ஏன் இகழ்வாக கருதுகின்றாய்? என்னை நீ ஏற்றுக் கொள்வாயாக என்று எப்போதும் புலம்பியவாறு எனது மகள் காணப்படுகின்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு