ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

30. வண்ணமும் வடிவும் - பாடல் 4

தனது மகள் தன்னை மதிக்காது, இகழ்ந்து பேசியதை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட தாய், மற்றவர்கள் மூலம் தனது மகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சி செய்தாள்போலும்.

Updated On :8 ஜூலை 2016, 12:30 pm

பாடல் 4

செய்ய மேனி வெண்ணீறு அணிவான் தன்னை
மையலாகி மதிக்கிலள் ஆரையும்
கைகொள் வெண்மழுவன் கழிப்பாலை எம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே

விளக்கம்

தனது மகள் தன்னை மதிக்காது, இகழ்ந்து பேசியதை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட தாய், மற்றவர்கள் மூலம் தனது மகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சி செய்தாள்போலும். அவர்களது சொல்லினையும் அலட்சியம் செய்த மகள், சிவபெருமான் பால் வைத்த காதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்ட தாய், தன்னை மட்டுமல்ல ஏனையோரின் சொற்களை தனது மகள் மதிக்காதிருந்த நிலையினை உணர்கின்றாள் இவ்வாறு தன்னையும் மதிக்காமல், வேறு எவரையும் மதிக்காமல் இருக்கும் பெண்ணுக்கு எவ்வாறு புத்திமதி சொல்வது என்று கவலை கொள்ளும் தாய் தனது வருத்தத்தை தெரிவிப்பதாக உள்ள பாடல். கற்புடைய நங்கையர் தனது கணவனைத் தவிர வேறு எவரையும் மதிக்கமாட்டாள். அவ்வாறே சிவபிரானுக்கு ஆட்பட்ட அடியார்களும், வேறு சிறு தெய்வங்களை மதிக்கமாட்டார்கள் என்ற கருத்தும் இந்த பாடலில் மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தனது சிவந்த மேனியின் மீது வெண்ணீறு அணிந்து காணப்படும் சிவபிரான் மீது மையல் கொண்டுள்ள நாள் முதல், எனது மகள் வேறு எவரையும் மதிப்பதில்லை. அதனால் எவரும் அவளை அணுகி, அவளது மனநிலையை அறியமுடியவில்லை. கையில் வெண் மழுவினை ஏந்தியவாறு கழிப்பாலையில் உறையும் சிவபெருமான் ஒருவன் தான், எனது மகள் தனது மனத்தினில் என்ன நினைக்கின்றாள் என்பதை உணர முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.