பாடல் 6
கங்கையைச் சடை வைத்து மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக் கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே

விளக்கம்

கங்கை மற்றும் உமையம்மை ஆகிய இருவரை மனைவிகளாகக் கொண்டவன் என்பதால், அப்பர் நாயகிக்கு ஒரு விதமான மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு காரணம், தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் ஒரே மனைவி என்ற கொள்கை உடையவன் அல்லன். எனவே தன்னையும் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு பிறக்கின்றது. தான் சிவபிரான் பால் வைத்துள்ள அன்பின் தன்மையை அவன் உணர்வான் என்பதால், தனது அன்பின் மிகுதி அவளுக்கு இறுமாப்பினை ஏற்படுத்துகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டவாறு, இது வரை அவனது வண்ணத்தையும் வடிவினையும் நேரில் கண்டவள் அல்லள் நமது நாயகி. எனவே தனக்கு அடையாளத்தினை உணர்த்துவதற்காக திங்களைச் சடையில் சூடியவாறு சிவபெருமான் வருவான் என்று கற்பனை செய்கின்றாள்.

இந்த பாடல் நமக்கு சுந்தரர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.23.2) நினைவூட்டுகின்றது. அடியார்கள் சிவபெருமானை நினைத்தால், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று அருள் புரியும் தன்மை உடையவன் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார்.

எங்கேனும் இருந்து உன்னடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே

பொழிப்புரை

கங்கையைத் தனது சடையில் வைத்து, உமை அம்மையையும் தனது உடலில் வைத்து, தனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் பரமனார், தான் அவன் பால் வைத்திருக்கும் ஆழமான அன்பின் தன்மையை உணர்த்து நிச்சயம் தன்னைச் தேடி வருவான் என்று இறுமாந்திருக்கும் எனது மகள், தான் யார் என்பதை உணர்த்துவதற்காக, பிறைசூடியாக சிவபெருமான் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு