பாடல் 6
பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

எண்ணார் = நினையாதவர்கள். முதலில் சிவதன்மத்தில் ஈடுபட்டு சிவபெருமானை வணங்கி வழிபட்டு நன்னெறியில் வாழ்ந்து வந்த திருபுரத்து அரக்கர்கள், பின்னர் சிவனை மறந்து, சிவதன்மத்தை மறந்து, அந்நாள் வரை செய்து வந்த நியமங்களை நிறுத்தினார்கள். மேலும் தாங்கள் கடைப்பிடித்த நன்னெறிகளிலிருந்து வழுவி மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்தனர். அதன் பின்னர் தான் சிவபெருமான் அவர்களுடன் போருக்குச் சென்றார். அதனால் தான் எண்ணாத அரக்கர்கள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்..

பொழிப்புரை

பண்கள் நிறைந்த ஒலியினை எழுப்பும் வீணையைப் பயிலும் விரல்களை உடையவனே என்றும், நல்ல வாழ்க்கை முறைகளை மறந்து அனைவருக்கும் தொல்லை கொடுத்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரது பறக்கும் கோட்டையினை எரித்தவனே என்றும், பண்களுக்கு ஏற்ப முழவு எனப்படும் தோற்கருவி வாத்தியம் இயங்க, பாடிக்கொண்டே கூத்தை நிகழ்த்தும் திறமை உடையவனே என்றும் எனது மகள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். கண்களுக்கு நிறைவைத் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு