பாடல் 7
முதிரும் சடைமுடி மேல் மூழ்கும் இளநாகம் என்கின்றாளால்
அது கண்டு அதனருகே தோன்றும் இளமதியம் என்கின்றாளால்
சதுர் வெண்பளிங்குக் குழைக் காதில் மின்னுடுமே என்கின்றாளால்
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

இளநாகம் = அடிக்கடி தனது மேல் தோலை (சட்டை) உரிப்பதால் திரை, நரை ஏதும் இன்றி இளமையான தோலுடன் பாம்புகள் காணப்படும் என்பதால் இளநாகம் என்று கூறப்பட்டுள்ளது. கங்கை நதியினையே மறைத்து தேக்கி வைக்கும் அளவுக்கு அடர்ந்த சடை என்பதால், அந்த சடையில் பாம்பும் மறைந்துவிடுகின்றது. எனவே தான் மூழ்கும் இளநாகம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்பாகவே பாம்பினைக் கண்டு அச்சம் கொள்ளும் சந்திரன், சடையில் பாம்பு மூழ்கி கண்ணுக்கு புலப்படாததால், சந்திரன் பயம் இல்லாமல் சடையில் உள்ளது என்று நயமாக கூறப்பட்டுள்ளது. சதுர் = வேலைப்பாடு மிகுந்த.

பொழிப்புரை

முதிர்ந்த சடை முடியில் இளநாகம் மூழ்கி விட்டதால் புலப்படவில்லை என்றும், நாகம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால் அச்சம் ஏதும் இன்றி சடையில் சந்திரன் இருக்கின்றது என்றும், வேலைப்பாடு மிகுந்த பளிங்கு போன்று வெண்மையான குழை காதில் மின்னுகின்றது என்றும் என் மகள் வாயிலிருந்து சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் கடல் அலைகள் மிகுந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு