ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

28. வனபவள வாய் திறந்து - பாடல் 9

வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும்,

Updated On :21 ஜூன் 2016, 10:41 am

பாடல் 9

வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே என்கின்றாளால்
ஊனுலாம் வெண்தலை கொண்டு ஊரூர் பலி திரிவான் என்கின்றாளால்
தேனுலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்

கான் = காடுகள். கையில் ஏந்திய பிரம கபாலம் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும், புலால் நாற்றம் வீசுவதால் ஊனுலாம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை

வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும், உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும் புலால் நாற்றம் வீசும் பிரம கபாலத்தை ஏந்தி பலி ஏற்பதற்காக உலகெல்லாம் திரிந்தவனே என்றும், தேன் உண்ணும் வண்டினங்கள் சூழ்ந்த கொன்றைப் பூக்கள் சிறப்புடன் விளங்கும் மார்பினை உடையவனே என்றும், எனது மகள் பிதற்றிக்கொண்டு இருக்கின்றாள். காடுகள் சூழ்ந்து நீர்வளம் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.