பாடல் 5
தக்கனது பெருவேள்வி தகர்த்தானாகித் தாமரையான்
நான்முகனும் தானே ஆகி
மிக்கதொரு தீ வளி நீர் ஆகாசமாய் மேலுலகுக்கு அப்பாலாய்
இப்பாலானை
அக்கினோடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே
அறு சமயமாகி நின்ற
திக்கினை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன்
அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

திக்கு = வழி. இந்தப் பாடலில் அப்பர் பிரான் பெருமான், நான்முகனாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். பல தேவாரப் பாடல்களில், மூவராய முதல்வன் என்றும் மூவராய ஒருவன் என்றும், சிவபெருமான் முத்தொழில்கள் செய்வதை, மூவர் முதலிகள் குறிப்பிடுகின்றார்கள். திருவதிகை திருத்தாண்டகம் ஒன்றினில் (6.03) அப்பர் பிரான், சிவபெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் நிலையினை உணர்த்துகின்றார். பொன் நிறத்தான் = பிரமன். புள்ளூர்த்தியான் = பறவையை, அதாவது கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்.

வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

சிவபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில், சிவபெருமான் பிரமனாகவும், திருமாலாகவும், உருத்திரனாகவும் நின்று முத்தொழில்கள் செய்யும் தன்மையினை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் அந்தப் பதிகத்தின் முதல் பாடலை, பிரமானாக சிவபெருமான் இருக்கும் நிலையினை உணர்த்தும் பாடலை இங்கே காண்போம். புவம் = வானம். வளி = காற்று. புனல் = தண்ணீர். கனல் = தீ. கலை = அறுபத்து நான்கு கலைகள். திரிகுணம் = சாத்வீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள். அமர் நெறி = விரும்பத்தக்க வழிமுறைகள். திவம் = தேவலோகம். மருவி = கூடி பொருந்தி, பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப்படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காகச் செய்யமுடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள்புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே

பெருவேள்வி என்று தக்கன் செய்த வேள்வியினை அப்பர் பிரான் இந்த் பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை புறக்கணித்து தான் செய்யும் வேள்வி, மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமைந்து, அனைவரும் தன்னை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட வேள்வி என்பதை குறிக்க, பெரு வேள்வி என்று இங்கே குறிப்பிடுகின்றார். சைவம், வைணவம், காணாபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருக வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு) என்பவை ஆறு வைதீக சமயங்களாக கருதப் படுகின்றன. பைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் எனப்படுபவை சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள் எனப்படுகின்றன. ஆறு வகை சமயத்தவர்க்கும் வீடுபேறாய் நின்றவன் என்று மணிவாசகரும் பெருமானை திருவண்டப்பகுதி பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

மிகவும் பெருமைக்குரிய முறையில், அதே சமயத்தில் தன்னைப் புறக்கணித்து தக்கன் செய்த வேள்வியை முற்றுப் பெறாதவாறு தகர்த்தவனும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனாக இருப்பவனும், ஐம்பூதங்களாக இருப்பவனும், மேலுலகமாகவும் அதற்கு அப்பாலாகவும் இப்பாலாகவும் எங்கும் பரந்து இருப்பவனும், சங்கு மணியையும் முத்தினையும் ஒன்று போல் கருதி அணிபவனும், தொண்டர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வகையான வைதீக சமயங்களாக வழியாக இருப்பவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை