23. கருமணியை கனகத்தின் - பாடல் 8

துறவு கொள்ளாமலே, இயல்பாக பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவனும், சோதி வடிவாக இருப்பவனும்,

Updated On :27 ஏப்ரல் 2016, 9:07 am

பாடல் 8

துறவாதே யாக்கை துறந்தான் தன்னை சோதி முழுமுதலாய்
நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணினோடு
ஆணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே
அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன்
அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

துறவாதே யாக்கை துறந்தான் = இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுபட்டவன். இந்த குணம் பெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாகும். மற்றவை, தன் வயத்தன், தூய உடம்பினன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், பேரருள் படைத்தவன், முடிவில்லாத ஆற்றல் உடையவன், வரம்பு இல்லாத இன்பம் உடையவன் என்பனவாம். மன்னி = நிலை பெற்று. அனவரதம் = எப்போதும்.

இந்த பாடலில் பிறப்பு என்பது இல்லாத பெருமான், அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது. இதே கருத்து தென்குடித் திட்டை என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.35) மூன்றாவது பாடலிலும் காணப்படுகின்றது. கருவின் வயப்படாத பெருமான், எல்லா உயிர்களுக்கும் கருவாக விளங்குகின்றான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தனக்கு ஒரு உருவம் இல்லாத இறைவன், மற்ற உயிர்களுக்கு உருவம் கொடுக்கின்றான் என்றும் அடியார்களுக்காக பல உருவம் எடுத்து காட்சி கொடுக்கின்றான் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினால் அன்றியே உருவு செய்தான் இடம்
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகு புகழ் தென்குடித் திட்டையே

பொழிப்புரை

துறவு கொள்ளாமலே, இயல்பாக பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவனும், சோதி வடிவாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களுக்கும் முழுமுதல் பொருளாக இருப்பவனும், பிறப்பு எடுக்காமலே எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனும், பெண்ணும் ஆணும் கலந்த உருவத்தினை உடையவனும், தனது புகழினை மறவாது வாழ்த்திப் பாடும் தொண்டர்களின் மனதினில் எப்போதும் நிலைத்து நிற்கும் பண்பினை உடையவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.