(தில்லை – நேரிசை)
பின்னணி
கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் சிவபிரான் தன்னை என்று வந்தாய் என்று கேட்பதாக உணர்ந்த அப்பர் பிரான் இந்தப் பதிகத்தில் அந்த கேள்விக்கு விடை அளிக்கின்றார். அப்பர் பிரான் அருளிய முதல் பதிகமாகிய கூற்றாயினாவாறு விலக்ககிலீர் என்ற பதிகத்தின் முதல் பாடலும் அப்பர் பிரானும் சிவபிரானும் உரையாடுவது போல் அமைந்து உள்ளது. அதே போன்று இந்த பதிகமும், கருநட்ட கண்டனை என்ற பதிகத்தில் உள்ள இரண்டாவது பாடலையும் சேர்த்து நாம் நோக்கும்போது, அத்தகைய உரையாடல் தொடர்வதை உணரலாம்.
நமது இல்லத்திற்கு வரும் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களைக் கண்டால் நாம் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி என்று வந்தாய் என்பதுதானே. அதிகையில் சூலை நோயின் கொடுமை தாளாமல் தமக்கையாரின் வழிகாட்டுதலில் திருநீறு அணிந்து சிவபிரானுக்குத் தொண்டு செய்ய முற்பட்ட அப்பர் பிரானை காண்பதற்கு மிகவும் ஆவலாக நடராஜப் பெருமான் இருந்தார் போலும். என்று வந்தாய் என்ற நமது கேள்விக்கு, நமது விருந்தினர், இப்போது தான் வந்துகொண்டிருக்கின்றேன்; நேராக உன்னைக் காணத்தான் வந்துள்ளேன் என்று பதில் அளித்தால் நாம் எல்லையில்லா பெருமகிழ்ச்சி அடைகின்றோம் அல்லவா.? அத்தகைய பதிலைத் தான் அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் அளிக்கின்றார். தான் எப்போது வந்தேன் என்பதை மட்டும் கூறாமல் தான் வந்த காரணத்தையும் இங்கே கூறுகின்றார். சிவபிரானே நான் இப்போதுதான் வந்துகொண்டு இருக்கின்றேன், உனது ஆடலைக் காணத்தான் வந்துகொண்டிருக்கின்றேன் என்ற விதமாக அனைத்துப் பாடல்களிலும் விடை அளிப்பதை நாம் உணரலாம்.
பாடல் 1
பத்தனாய் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே

விளக்கம்

முத்தன் = இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுதலை பெற்றவன். சிவபிரானின் எட்டு குணங்களில் ஒன்று. மற்றைய குணங்கள், தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்பன ஆகும்.. பாசங்களிலிருந்து விடுதலை பெற்ற ஒருவனால்தான் மற்றவர்களின் பாசக் கட்டுக்களை அறுத்தெறிய முடியும். எனவே இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய சிவபிரான் தான் எவருக்கும் முக்தி அளிக்கும் சக்தி படைத்தவன். முக்தி அளிப்பவன் என்பதால் முத்தன் என்றும் சிவபிரானை அழைப்பதுண்டு.

தான் பக்தன் என்ற நிலையில் இல்லாமல் பாடுவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பத்து கொலாம் அவர் செய்கை தானே என்று ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தில், அடியார்களின் தன்மை பத்து வகைப்பட்டவை என்று கூறும் அப்பர் பிரான் தனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று அடக்கமாக கூறிக்கொள்கின்றார். அத்தகைய குணங்கள் தன்னிடம் இல்லாமையால் தான் எவ்வாறு சிவபிரானிடத்தில் பக்திகொள்வது என்ற கேள்வியை எழுப்பி, அதற்காக தன்னை இகழ்ந்து ஒதுக்கிவிட வேண்டாம் என்று இறைவனிடத்தில் மன்றாடுகின்றார். பெரியபுராணத்தில் அப்பர் வாழ்வினை விவரிக்கும் சேக்கிழார் பல இடங்களில் கூறும் குறிப்புகளிலிருந்து, அப்பர் பெருமான் பக்தர்களுக்கு இருக்க வேண்டிய பத்து அக குணங்களும் பத்து புற குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்ததை நாம் அறியலாம்.

பொழிப்புரை

பரம்பொருளே, அனைவர்க்கும் மேலான யோக நாயகனே, உன்னிடத்தில் பக்திகொண்டு உன்னைப் புகழ்ந்து பாடத் தெரியாத இந்த அடியேனை, உன்னிடத்தில் பக்தி கொள்வதற்கான குணங்கள் ஏதும் இல்லாத அடியேனை நீ இகழாமல், எனது பாடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். உனது அடியார்களுக்கு முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவனே, முதல்வனே, நீ தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் அழகினைக் காண்பதற்காக அடியேன் வந்துகொண்டிருக்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை