பாடல் 6
பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்தவாறே
விளக்கம்
புவம்வளி கனல் புனல் என்று தொடங்கும் பதிகத்தின் (முதல் திருமுறை பதிகம் எண் 21) முதல் மூன்று பாடல்களில் ஞானசம்பந்தப் பெருமான், சிவபிரான் பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று வடிவங்களாக இருந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வதாக கூறுகின்றார். இதே கருத்து திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி, எட்டாம் பாடலிலும் வலியுறுத்தப் படுகின்றது முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று குறிப்பிட்டு, முதல் தொழிலாகிய தோற்றத்தையும், நடுத் தொழிலாகிய படைத்தலையும் இறுதித் தொழிலாகிய அழித்தலையும் மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார்.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணைவிரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிருமேனியும் காட்டித் திருப்பெருந்துறை உறைகோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
திருச்சதகத்தின் ஒரு பாடலிலும் மூவார் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி என்று குறிப்பிடும் மணிவாசகர் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் என்று சிவபிரான் மூன்று தொழில்களையும் செய்யும் நிலையினை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
வழிபடும் அடியவர்களின் துயரத்தைத் தீர்ப்பவனே, தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்து ஆடுபவனே, உனது திருநடனத்தைக் காணும் அடியேன் உன்னை புகழ்ந்து பாடுவேன் ஆடுவேன், மூர்த்தியே என்றும் மூவரில் முதல்வனே என்றும் உன்னை புகழ்ந்து கூறுவேன், உனது திருநடனத்தைக் காணவே நான் அடியார்களுடன் கூட வந்துகொண்டு இருக்கின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

