25. பத்தனாய் பாடமாட்டேன் - பாடல் 7

சிவபிரான் ஒருவரே மெய்யான பரம்பொருள். அவரைத் தவிர்த்து உலகில் காணப்படும், அறியப்படும் அனைத்துப்

Updated On :21 மே 2016, 7:05 am

பாடல் 7

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலாம் அடிமை செய்ய
ஐய நீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தீ
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே

விளக்கம்

பொய் = நிலையில்லாத உலகப் பொருட்கள். பைய = மெல்ல.

சிவபிரான் ஒருவரே மெய்யான பரம்பொருள். அவரைத் தவிர்த்து உலகில் காணப்படும், அறியப்படும் அனைத்துப் பொருட்களும் நிலையில்லாதவை, பொய்த்தோற்றம் கொண்டவை. எனவே நிலையில்லாத அத்தகைய பொருட்களின் மேல் தான் கொண்டுள்ள பற்றினை நீக்குவதற்கு சிவபிரானின் அருள் வேண்டி இங்கே அப்பர் பிரான் முறையிடுகின்றார். மணிவாசகப் பெருமானும் இறைவனைத் தவிர்த்து புறம் போகமாட்டேன் என்று உறுதியாக இருப்பதை அவரது உயிருண்ணிப்பத்து பதிகத்திலிருந்து நாம் அறியலாம்.

வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்

வேண்டேன் பிறப்பிறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும்

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருபெருந்துறை இறை தாள்

பூண்டேன் புறம் போகேன் புறம் போகலொட்டேனே

உருத்திர தாண்டவம் போன்று வேகமாக ஆடாமல் மெதுவாக ஆடும் நடனம் என்பதை குறிப்பதற்காக பைய நின்னாடல் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

அனைவருக்கும் முதலான ஆதி முதல்வனே, ஆதி மூர்த்தி ஐயனே, இந்த உலகினில் காணப்படும் நிலையில்லாத பொருட்களின் மீது எனக்குள்ள பற்றினை நீக்கி, உன்னை நினைப்பதிலிருந்து நீங்காமல் உனக்கு நான் அடிமைத் தொழில் செய்வதற்கு நீ அருள்புரிய வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகமான சிறப்பினை உடைய தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நீ ஆடும் நடனத்தைக் காண்பதற்காக நான் வந்துகொண்டு இருக்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.