பாடல் 8
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறி கண் மேலே
கனைப்பரால் என் செய்கேனோ கறையணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லை சிற்றம்பலத்தே
அனைத்து நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே

விளக்கம்

இகழ்ச்சி தோன்ற ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு மனத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. அப்பர் பிரான் தனது மனத்தினை கட்டுப்படுத்த முடியாத தனது செயலற்ற தன்மையை குறிப்பிட்டு வேதனைப் படுகின்றார். சிவபிரான் அருள் கூடினால்தான் தனது வேதனை தீரும் என்ற எண்ணத்தினை அவரது அங்கலாய்ப்பு வெளிப்படுத்துகின்றது.

இலயம் என்பதற்கு உலகங்கள் என்று பொருள் கொண்டு அனைத்து உலகங்களும் கூத்தபிரானின் நடனத்தில் ஒடுக்கம் என்பதை இங்கே உணர்த்துவதாகவும் கூறுவார்கள்.

பொழிப்புரை

விடம் உண்டதால் கருநிறமாக மாறிய கழுத்தினை உடைய நீலகண்டனே, எனது உள்ளம் பெருமை தராத வழிகளையே நாடித் திரிகின்றது. யான் யாது செய்வேன்? தினையளவு கூட குறையாமல் வேதங்கள் பாடப்படுகின்ற தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நீ ஆடும் நடனத்தின் அழகினைக் காண்பதற்காக நான் வந்துகொண்டு இருக்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை